தகவலை தட்டச்சு செய்து வழங்கிய சொந்தம்: திரு. சாமி அவர்கள்.
விழுப்புரம் மாவட்டம், ஆசூர் திருவாலீசுவரர் கோயில் கல்வெட்டு:
நன்றி: "வன்னியர்" - திரு.நடன.காசிநாதன் அவர்கள்
ஆதாரம்:ஆவணம், இதழ் 12, சூலை- 2001, பக்கம் 6- 8
இக்கல்வெட்டு ஆசூர் திருவாலீசுவரர் கோயிலில் மகா மண்டபக் கிழக்குச் சுவரில் பொறிக்கப்படுள்ளது.
வன்னிய நாயக்கமாரால் கோயிலைப்பெருநல்லூர் பற்று (கோலியனூர்) ஆசூரில் நாயனார் திருவாலந்துறை உடைய நாயனாருக்குக் கொடை அளித்தது குறிக்கப்பெறுகிறது.
இக் கல்வெட்டு விஜயநகர வேந்தன் வீரபுக்கண உடையார் காலத்தைச் சார்ந்தது(கி.பி. 1379).
இதன் மூலம் வன்னியர்களுக்கு "நாயக்கர்" பட்டம் உண்டு என்பது தெரிகிறது.
மேலும், அதற்க்கு முன்பில் இருந்தே வன்னியருக்கு நாயக்கர் பட்டம் உண்டு. நந்தி கலம்பகத்தில் நந்தி வர்ம பல்லவனை "நாற்கடல் நாயகன்" என்று குறிப்பிட படுகிறது. பல்லவர்களுக்கே "நாயகர்" பட்டம் உண்டு. மேலும் "மாதண்ட நாயகர்", "வடதிசை நாயகர்" என்று பல்லவ குடிகளான சம்புவராய மன்னர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .