Friday, 20 April 2012

"பன்னாட்டான் தம்பிரான்" - திட்டக்குடி கல்வெட்டு

தகவலை தட்டச்சு செய்து வழங்கிய சொந்தம்: திரு. சாமி அவர்கள்.

நன்றி: "வன்னியர்" --- திரு.நடன.காசிநாதன் அவர்கள்

திட்டக்குடி கல்வெட்டு:

இடம்பெரம்பலூர் வட்டம் திட்டக்குடி

காலம்மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்,யா: 4 (கி.பி. 1338)

செய்திவிக்கிரம சோழனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி.1122 இல்கர்நாடகத்தில் போசள நாட்டை ஆண்டு வந்த முதலாம் விஷ்ணுவர்த்தனன் என்பவன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்இதனை பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டு "பெரியவடுகன் கலகம்என்று குறிப்பிடுகிறதுசோழ நாட்டின் மீது படையெடுத்த போசள மன்னன் ஆடுதுறை பகுதியிலும் தாக்குதல் நடத்தி ஆடுதுறை சிவன் கோயிலில் இருந்த தெய்வத் திருமேனிகளையும் நாயன்மார் பிரதிமங்களையும் கவர்ந்து சென்று போசளர் தலைநகரமாகிய துவாரசமுத்திரத்தில் வைத்திருந்தனர்.

பின்னர் இதனை அறிந்த ஆடுதுறை பகுதியைச் சேர்ந்த பள்ளிகள்(வன்னிய குலத்தவர்அங்கிருந்து துவாரசமுத்திரம் சென்று போசளர்களுடன் சண்டையிட்டுஅவர்களால் கவரப்பெற்ற ஆடுதுறை கோயிலுக்குரிய தெய்வத் திருமேனிகளையும்நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் மீட்டு வந்து அத்திருவுருவங்களை மீண்டும் ஆடுதுறை சிவன் கோயிலிலேயே வைத்துநாள் வழிபாடுகள் செய்வதற்கு ஆண்டொன்றுக்கு 100 கலம் அரிசியும், 5000 காசும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அத்திருமேனிகளை வழிபாட்டில் வைத்தனர்அதற்காக அவர்கள் குடி ஒன்றுக்கு ஒரு குறுணி அரிசியும், 50 காசும் வசூல் செவது என்று முடிவு செய்தனர்.

சிலைகளை மீட்ட பள்ளிகளை கௌரவிக்கும் பொருட்டுஅவர்களுக்குப் பட்டுப்பரிவட்ட மரியாதை கொடுத்துஇறைவன் திருமுன் நின்று வழிபாடு செய்யும் உரிமையும் அளித்துஅவர்களுக்கு "பன்னாட்டார் தம்பிரான்என்ர பட்டமும் அளித்து பெருமைப்படுத்தினர்இதற்கான ஆணையை இரண்டாம் குலோத்துங்கன் பிறப்பித்தான் என்றும் இக்கல்வெட்டு கூறுகின்றது.

கி.பி.1122இல் விகிரம சோழன் காலத்தில் நடந்த ஒரு அருஞ்செயலுக்காக 216 ஆண்டுகள் கழித்து சோழர் ஆட்சிக்குப் பிறகு மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் அதே பள்ளி இன மக்களுக்கு மரியாதை மற்றும் சலுகைகள் வழங்கியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

கல்வெட்டு வாசகம்:

1. ஸ்வஸ்தி ்ரீ திரிபுவனச் சக்கரவத்தில் ்ரீ பராக்கிரம பாண்டிய தேவர்க்கு யாண்டு (4) ஆவது வைகாசி மாதம் நாலாந் தியதி பல மண்டலங்களில் நாடும் நகரமும் எல்லா மண்டலங்களில்

2. பலநாட்டவரும் பழி காரியங் கேழ்ப்பதாக உள்ளூரில் பெரிய நாட்டான் காவி நிரவற குறைவறக் கூடி இருக்க உடையார் குற்றம் பெறுத்தருளிய நாயனார்

3. கோயிலில் எங்கள் மூதாதிகள் கல்வெட்டினபடி திரிபுவனச் சக்கரவர்த்திகள் ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு பாண்டு (4) ஆவதுமுடிகொண்ட சோழ வளநாட்டு உகளூர் கூற்றத்து இறையான புஞ்

4. சை குரங்காடி மகாதேவர்க்கு இந்நாட்டில் ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முஇடிகொண்ட சோக முத்தரையன் உள்ளிட்டாரும் ஓலைப்பாடியில் காணி உடை

5. பள்ளிகளில் காரிகிரிச்சன் விக்கிரமசோழ முத்தரையன் உள்ளிட்டாரும்தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்

6. மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகதசோழ முத்தரையன் உள்ளிட்டாரும் இவனைவரோம் கல்வெட்டி குடுத்த 

7.ரிசாவது இன்னாயநார் கோயிலில் திருமேனி நாயமார் பெரிய வடுகன் கலகத்தில் செமம..... தோரசமுத்திரதேற எழுந்தருளி போகையில் இன்னாயமாற்கு நெடு அத்தம் குடுத்து மீண்டும் கோயிலிலே எழுந்த

8. ருளப் பண்ணிநர்களென்று கொண்ட உபயமாவது இன்னாயநார் திருநாளுளிட்ட பல திவலைகளுக்கும் அமுதுபடிக்கும் அரிசி நூற்றுக் கலமும் படிவெஞ்சனமஞ் சாத்துபடிக்கு காசு ஐயாயிரமும் இந்

9. குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டார் திருநாளகத்தோறும் குறைவறுத்து வீரநாராயணன் பேரேரிக்கு மேற்கு பச்சை மலை கிழக்கு

10. காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தோறும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக நாட்டில் வெண்கலம் எடுத்து மண்கலம் இடித்து(ம்)

11. குத்தியும் தண்டியும் முதலாக்கி திருநாள்தொறும் இப்படி குறைவறுக்கக் கடவோமாகவும் சம்மத்திதுச் சந்திராதித்தவரையும் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் பள்ளி நாட்டவரோம் இப்படி செய்

12.  பள்ளி நாட்டவர்க்கு பட்டுப் பரிவட்டமும் திருமுனொடுக்கும் பெறக் கடவதாகவும் எழுந்தருளிப் புறப்பட்டால் "வந்தான் தேவர்கள் தேவன்என்கிற திருச்சின்னத்து முன்பே "பன்னாட்டான் தம்பிரான்என்கிற திரு

13. ச் சின்னம் பணிமாறக் கடவதென்று பெருமாள் குலோத்துங்க சோழ தேவர் திருவாய் மலர்ந்தருளின படிக்கு ச்ரீ மாஹேஸ்வர ரஷை இக்கல்வெட்டினபடியே திருனாளகத்தொறும் தண்டி கொ

14.ள்ளவும் இன்னாயநாற்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலவது முதல் வில்லுக்கொரு பணமாக...... வெண்கலம் அடுத்தும் மண்கலம் உடைத்தும் குத்தியும் அடிக்கடி தண்டியு(ம்முத

15.நாக்கவும் இதுக்கு இலங்கணமஞ் சொன்னாருண்டாகில் நம்மிலொருவன் அல்லவாகவும் இவன் ()பத்தி..... சோழன் எடுத்த இந்நாயனாற்கு திருப்பணி

16. க்கு முதலாக்கவும் இப்படி சம்மதித்த் சந்திராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம் இப்படிக்கு இவை பல

17. மண்டலங்களில் பள்ளி நாட்டவர் பணியால் இடங்கை விக்கிரம.... எழுத்து பள்ளி நாட்டவர் வம்சம் விளங்க.

--------- ------- ------------ ---------- ---------- ----------- ---------- ------