Tuesday 6 December 2011

தமிழகத்தில் வாழும் சோழ மன்னர்களின் வாரிசுகள்.





மன்னர்களின் செல்வாக்கையும் புகழையும் சரித்திரக் கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அது உண்மையா? புராணகாலக் கதைகளா? எனப் பார்ப்போர், படிப்போர் எண்ணங்களில் எழுவதும்.

பட்டாடை படாடோபங்களோடு முடிதாங்கி செங்கோல் ஆட்சி செலுத்திவந்த சோழ மன்னர்களின் வாரிசுகள் தற்போதும் அதே கம்பீரத்தோடு ஆனால் வரிய நிலையில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியத்தில் நம் விழிகள் விரிந்தன.

சோழ மன்னர்களின் வாரிசுகள் தொடர்பாக 2004ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட களஆய்வு ஆவணப்படம் இதை ஆதாரப்பூர்வமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சோழ மன்னர்கள் பற்றிய அரிய வரலாற்று ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதோடு யானை கட்டிப் போரடித்து, யானை, சேனை, அப்பாரியோடு படை நடத்தி, செல்வச்செழிப்பில் கோட்டைக் கொத்தளங்களில் வாழ்ந்த சோழ மன்னர்களின் வாரிசுகள் தற்போது சிதம்பரத்தில் உள்ள பிச்சாவரம் கிராமத்தில் சிறிய, பழைய ஓட்டு வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்கிறது சோகமான குரலில் 45 நிமிடத்தில் ஓடக்கூடிய அந்த ஆவணப் படம்.

பழந்தமிழ்நாட்டை ஆண்ட (சேரர், சோழர், பாண்டியர்) மூவேந்தர்களுள் சோழர் புகழ்பெற்று விளங்கியிருந்தார்கள். “நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. நெல்லின் மற்றொடு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து ‘சோழ’ என்று வழங்கிற்று” என்கிறார் சொற்பிறப்பியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணர்.

கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன. முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.

9ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டை ஆண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குச் செலுத்தியது.

சோழர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான்.

இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வடஇந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்தது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்ட வர்கள் சோழர்களே ஆவர்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். வம்சம் சிதறிச் சிற்றரசர்களானார்கள். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடம் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர்.

மேலும் மராட்டிய மன்னர்கள், வெள்ளைக்காரர்கள் நடத்திய போர்களில் சோழர்கள் வாழ்ந்த கோட்டை அழித்தொழிக்கப்பட்டு அவர்கள் வாழ்ந்த நிலங்கள் அவர்களின் கைமாறி இன்று ஏதுமற்றிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த கோட்டை இருந்த பகுதியில் தற்போது அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒரு தூணும் பாழடைந்த ஒரு கிணறும்தான் மௌன சாட்சியாகக் காட்சி தருகின்றன.

சோழர்கள் வன்னியர்கள் என்றும், சோழர்களின் முதன்மைத் தெய்வம் சிதம்பரம் நடராஜர் என்றும், சிதம்பரம் கோயில் தில்லைவாழ் அந்தணர்களால் காலகாலமாக இன்றுவரை முடிசூடு விழா நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறுகிறது ஆவணப்படம்.

காலச்சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட சோழ மன்னர்களின் முடியாட்சி பற்றியும் அவர்களின் வாரிசுகளைப் பற்றியும் சொல்லும் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் ஆறு. அண்ணல். அவருடன் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிராஜன், தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் மா. சந்திரசேகர், வரலாற்று ஆய்வாளர் புலவர் முத்து எத்திராசன் ஆகியோர் உள்ளிட்ட பலர் குழுவாகச் சென்று இந்த ஆய்வைச் செய்திருக்கிறார்கள்.

தேவிக்கோட்டையில் மன்னர்களாக வாழ்ந்த சோழர்கள் அங்கு ஏற்பட்ட கடும் போரில் அங்கிருந்து பிச்சாவரம் வந்து ஜமீன்களாகவும் பாளையக்காரர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போது அங்கு சோழர் களின் வாரிசாக ஆண்டியப்ப சூரப்ப சோழனார், (சி.டி. படத்தில் உள்ளவர்) அவர் மனைவி உடையார்பாளையம் அரசர் மகள் சாந்திதேவி ஆயாள் ஆகியோரின் வாரிசுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போலவே தில்லைக் காளி கோயிலிலும் சோழர்களின் வாரிசுக்கு முதல் மரியாதை வழங்கப் படுகிறது. அங்கு சோழர்களால் கட்டப்பட்ட 600 ஆண்டு பழமைவாய்ந்த காயத்ரிதேவி கோயில் கட்டப்பட்டுள்ளது. (காயத்ரி தேவிக்கு வேறெங்கும் தனிக்கோயில் காணப்படவில்லை என்கின்றனர்.)

பழங்காலத்தில் சிதம்பரம் கோயிலின் இரவு பூஜை முடிந்த பின்பு பிரசாதங்களுடன் கோயிலின் சாவி பல்லக்கில் வைத்து நான்கு பேர் தூக்கிச்சென்று சோழ மன்னரிடம் வழங்குவது வழக்கமாக இருந்திருக் கிறது. எவ்வளவு போர்கள் ஏற்பட்டபோதும் யாருக்கும் அடிபணியாமல் தனித்து இருந்த சோழர்களுக்குத்தான் இன்றுவரை முடிசூட்டு விழா வருகிறது.

இன்றும் வாழும் சோழ மன்னர்கள் எனும் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ஆறு. அண்ணல் மிகவும் சிரமம் எடுத்து சோழ மன்னர்களைப் பற்றி ஆய்ந்து அவர்கள் ஆண்ட பகுதிகளையும் தற்போது வாழும் வாரிசுகளையும் தனித்தனியாக நேர்காணல் கண்டு பல ஆவணங் களையும் அரிய புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

வெள்ளையர்களின் காலத்தில் பொலிடிகல் பென்சன் சோழர் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் அவர்கள் காலத்திலேயே ஒரு காரணத்தைக் காட்டி நிறுத்தப்பட்டது. ஆண்டுதோறும் தமிழக அரசு சோழனுக்கு விழா எடுத்துவருகிறது. ஆனால் வறிய நிலையில் வாழ்ந்துவரும் சோழர் மன்னர்களின் வாரிசுகளுக்கு உதவி வழங்கி வேண்டும் என்ற கோரிக்கையோடு முடிகிறது ஆவணப்படம்.

தமிழக மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படைப்பான ‘இன்றும் வாழும் சோழ மன்னர்கள்’ எனும் ஆவணப் படம் ஒவ்வொருவர் வீட்டிலும் புத்தக அலமாரியை அலங்கரிக்கக்கூடியது.


Source : http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=334


நன்றி: கவின் இல்லம்

Wednesday 30 November 2011

பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன்.



Pallava King Narasimma Varman I

வன்னியக்குல பேரரசன் ராஜராஜ சோழனின் தபால் தலை.



சோழ மண்டகப் படி செய்யும் உரிமை பெற்ற வன்னியக்குல க்ஷத்ரிய குடும்பம்



சோழ மண்டகப் படி செய்யும் உரிமை பெற்ற வன்னியக்குல க்ஷத்ரியரான பிச்சாவரம் பாளையக்காரர் மஹாராஜா ஸ்ரீ சூரப்ப சோழனார்.

வன்னியரான ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னம்


வன்னியரான ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னம் "கங்கை கொண்ட சோழப்புரம்" பெருவுடையார் கோவில்.

Saturday 27 August 2011

சோழர் வன்னியக்குலத்தவர் என்பதற்கு வாழும் ஆதாரம்.....


சோழர்களின் குலதெய்வமான சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய காணொலியில் இடம் பெற்ற சோழ வம்சத்தின் வாழும் வாரிசுகள் பற்றிய தொகுப்பு.




Wednesday 11 May 2011

வன்னியக்குல க்ஷத்ரிய சமுதாயம் தோன்றிய நாள்.



பங்குனி உத்திர திருநாள் - ருத்ர வன்னிய மஹாராஜா சம்பு மஹரிஷி யாகத்தில் இருந்து அவதரித்த திருநாள்.வன்னியக்குல க்ஷத்ரிய சமுதாயம் தோன்றிய நாள். தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருக்கும் ருத்ர வன்னிய மஹாராஜா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வன்னியர் ஆட்சி செய்த திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்னியர் தோற்றம் பற்றிய நாடகமும் தெருக்கூத்தும் நடைபெறும். தமிழனின் முதல் கலையான தெருக்கூத்து வன்னிய சமுதாயத்தின் கலை என்பது குறிப்பிடத்தக்கது.

The Panguni uthiram day is the birthday of Rudra Vanniya Maharaja. Birthday of Vanniyakula kshatriya community. Rudra Vanniya Maharaja ruled the whole south india. The four kingdoms formed by his four sons are Chera,Chozha,Pandya,Pallavas.

பழுவேட்டரையர்கள் வன்னியக்குலத்தவரே.

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

மழவராயர்,மானங்காத்த மழவராயர் போன்ற பட்டங்கள் வன்னியருக்குண்டு.எந்த வகையில் பார்த்தாலும் இப்பட்டம் நமக்கு சாலப்பொருந்தும்.

மழவராயர் = மழவர் +அரையர்

மழவர் தலைவர் என்பது இதன் பொருள். மழவர் என்பவர் யார்?
அவர்கள் ஒர் போர்க் குடியினர்.

மழவர் தாயகம் எது தெரியுமா? மழகொங்கம் எனப்பட்ட பகுதி.இது தருமபுரி,நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.

தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் மழவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரியை ஆண்ட அதியமான் மழவர் மரபினன்.

மழவர் அடிப்படையில் சேரர் தொடர்புடையவர்கள்.

சேரர் குலச் சின்னம் - வில்

மழவர் குலச் சின்னம் - வில்

வன்னியர் குலச்சின்னம் - வில்

வன்னியர் குல சின்னம் வில் என்பதும்,வன்னியர்களின் வில் சிறப்பு பற்றி கம்பர் எழுதிய வன்னிய மன்னன் கருணாகார தொண்டைமானை பற்றிய "சிலையெழுபது" என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். ருத்ர வன்னிய மஹாராஜா கையில் வாளோடும், வில்லோடும் பிறந்தவர் என்று வன்னியர் புராணம் சொல்வதும்
குறிப்பிடத்தக்கது.

மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள் பின்வருமாறு தம் நூல்களில் கூறியுள்ளனர்.

வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.

"தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னொரு செய்தி :அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர் அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.

சேரர் அக்னிகுலக்ஷத்ரியர் என்பதும் வன்னியர்கள் அக்னிகுலக்ஷத்ரியர் என்பதும். அரியலூர் ஜமீன்தாரான மழவராயர் வன்னிய குலத்தினர் என்பதும், மழவரும் சேரரும் வன்னியர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மழவர் வன்னியர் என்பதால் பழுவேட்டரையரும் வன்னியர்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மழவர் சேரரின் கிளைப் பிரிவினர்.பழுவேட்டரையரும் சேரனாட்டுத் தொடர்புடையவர், மழவர் என்பதால் அவர் வன்னியர் என்று உறுதியாகக் கூற இயலும். மேலும் இவர்கள் "மகரிஷி வம்சத்து ஷத்திரியர்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.இதுவும் அவர்கள் வன்னியர் என்ற கருத்தை உறுதிபடுத்துகிறது.

எனவே, பழுவேட்டரையர்கள் வன்னியக்குலத்தவரே.

Tuesday 10 May 2011

வன்னியக்குல மாவீரன் கருணாகரத் தொண்டைமான்

பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு,பல்லவகுடியினர் பல்லவராயர்,சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.அவ்வாறாக வந்த ஒருவர்தான்,சோழ(வன்னிய)மன்னன் குலோத்துங்கச் சோழன் படைத்தளபதியான பல்லவர் குடியிலிருந்து வந்த கருணாகரத்தொண்டைமான். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது தான் "சிலையெழுபது" எனும் நூல் .கருணாகரத் தொண்டைமானை "வன்னியர்" என்று சொல்கிறது இந்நூல். கருணாகர தொண்டைமானின் குலம் வன்னியர் குலம் என்றும் சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் இந்த நூல் சொல்கிறது.

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html

வன்னியக்குல மாவீரன் கருணாகரத் தொண்டைமான் பெருமைகளை கலிங்கத்துப் பரணி எனும் நூலின் வாயிலாகவும் அறியலாம்.

வன்னியரே சோழ மன்னர்களின் வாரிசுகள்.


தகவலை வழங்கிய சொந்தம் : திரு.பாலச்சந்திர ராய ராவுத்த மீண்ட நயினார் அவர்கள்.

தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் இரண்டாவது கருத்தரங்கு 1995 ஆகஸ்ட் 26, 27இல் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ஆம் சிதம்பரத்தில் தில்லை நடராசர் திருக்கோவில் இருக்கும் ஊரில் நடைபெற்றது.

அப்போது அதாவது 1995லேயே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய புலவர் செ.இராசு சோழமன்னர்கள் யார்? என்றும் தலைப்பில் கட்டுரை ஒன்று வாசித்தார்.

அந்தக் கட்டுரையில் சோழ மன்னர்களின் வாரிசுகள் சோழமன்னர் மரபில் தோன்றிய சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறுகிறார். அதற்கு முதலில் அவர் காட்டிய ஆதாரம்: 2.7.1939 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், தேப்பெருமாள் நல்லூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரையாற்றிய வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள், சோழ மன்னர் மரபினர் சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறினார்.சிதம்பரம் தில்லை நடராசர் கோவில் சோழப் பெருமன்னர்களுக்குக் குலதெய்வம் தில்லை நடராசரே என்று முன்னர் குறிப்பிட்டோம். விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தியில் தன்குல நாயகன் தாண்டவம்பயிலும் தில்லையம்பலம் என்று கூறப்படுகிறது.

இன்று உள்ள பிச்சாவரம் ஜமீன்தார்களுடைய குலதெய்வம் நடராசப் பெருமாளே ஆவார்.
இவ்வாறு சோழ மன்னர்களின் மரபினர் பிச்சாவரம் ஜமீன்தார்களே என்று கூறி புலவர் செ.இராசு காட்டும் ஆதாரம் தஞ்சைச் சோழமன்னர்களின் வாரிசு என்று கூறுவதற்குக் காட்டும் ஆதாரம்.

அண்மைக்காலம்வரை தில்லை நடராசர் கோயில் உரிமை பிச்சாவரம் ஜமீன்தாருக்கே இருந்தது. ஆதலால் தில்லைக் கோயிலின் சாவி நாள் தோறும் ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. அர்த்த சாமப் பூசையின் பின் கோயில் சாவி பல்லக்கில் வைக்கப் பட்டுப் பிச்சாவரம் கொண்டு சென்று அளிக்கப்படும். அதிகாலை மீண்டும் அவ்வாறே வாங்கி வரப்படும்.

பிச்சாவரம் ஜமீன்தார்கள் சோழர் வாரிசு என்பதால், கோவிலைக் கட்டியவர்கள் சோழ மன்னர்கள் என்பதால், அவர்களுக்கு அடங்கிக் கோயிலில் பூஜை செய்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் 5.11.1911இல் 12 தீட்சிதர்கள், தீட்சிதர்களின் சார்பில் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிச்சாவரம் ஜமீன்தாரை மகா.ரா.ரா.ஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

வலம்புரிச் சங்கால் பஞ்சாக்கரப் படியில் அமரச் செய்து முடி சூட்டினர் என்பதைப்பின் வரும் பாட்டு உறுதிப்படுத்துகிறது.

அலகில் மற்றெவரும் அணுகுவதற்கு அரிய பற்சக்கரத்திருப்படி மிசை அமர்த்தி
அஞ்சேல் என நடம் ஆடும் இறைவன்முன் வலம்புரிச்சங்கால் கங்கை நீர் பெய்து நலம் பெறத் திருஅபிடேகம் செய்தபின் தேவரும் முனிவரும் திருவுளங்களிய
பூமகள் இங்கு பொன் மணி மண்டபத்து அரியாசனத்தில் அரசனை அமர்த்தி
பரிவுடன் துதித்துப் பரமனை வணங்கி முடிதலை முனிவர் திருக்கரத்து ஏந்திச் சூடினர் வாழ்த்திச் சோழனார் தமக்கே

பிச்சாவரம் ஜமீன்தார்கள் பட்டா பிஷேகத்தை ஒட்டிப் பட்டாபிஷேகப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடும் அறிவிப்பிலே,

ஆதியிலே கௌட தேசாதி பனுடைய மூத்த குமாரனாகிய இரணிய வர்வச் சக்கரவர்த்தி என்னும் காரணப் பெயர் பூண்ட சிம்மவர்மச் சோழனால் பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் ஆக்ஞைப் படி தில்லைக் காட்டைத் திருத்தி தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப் பெற்று ஸ்ரீ சிதம்பரம் நடராசப் பெரு மாள் சந்நிதியிலே தில்லை மூவாயிர முனிவர்கள் திருமுன்னே ஸ்ரீபஞ்சாக்கரப் படியின் மீதே மேற்படி சோழ வம்சத்தினருக்குத் தொன்று தொட்டு பட்டாபிஷேகம் நடந்து வந்த சம்பிராதாயப்படி அச்சோழ வம்சவழி வந்த பிச்சாவரம் ஜமீன்தார்.

எனும் அந்தப் பா தொடங்குகிறது முடிவுரையாகப் புலவர் இராசு இவ்வாறு முடிக்கையிலும் சோழருக்கு அன்றி முடி சூடாத்தில்லை மூவாயி ரவர் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு முடிசூட்டுவதாலும், அப்போது புலிக் கொடி அளித்தலினாலும், வளவன் என்ற பெயர் உள்ளமையாலும், தில்லை நிருவாகம் பெற்றிருந்த காரணத் தாலும் தில்லை நடராசரைக் குல தெய்வமாகக் கொண்ட காரணத் தாலும், தில்லைக் கோயில் சாவியை வைத்திருந்த உரிமையாலும், தில்லை தீட்சிதர்கள் கட்டுப்பட்டிருந்தமை யாலும், சோழனார் என்ற பெயர் பெற்றிருப்பதாலும் பிச்சாவரம் ஜமீன்தார் மரபினரே சோழர் மரபினர் என்பது உறுதியாகிறது.

Saturday 7 May 2011

வன்னியக்குல பேரரசன் ராஜராஜ சோழனின் "பள்ளிப்படை வீடு"



வன்னியக்குல பேரரசன் ராஜராஜ சோழனின் "பள்ளிப்படை வீடு".





ராஜராஜ சோழனின் பள்ளிப்படை வீட்டை பராமரிக்கும் ராஜராஜ சோழனின் குலமான வன்னியக்குலத்தில் பிறந்த ஏழை விவசாயி பக்கிரிசாமி படையாட்சியார் அவர்கள்.

வன்னிய மன்னன் அதியமான்


அவ்வைக்கு நெல்லிகனி அளித்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான தகடூர் என்னும் தர்மபுரியை ஆண்ட வன்னிய குல மன்னன்
அதியமான் நெடுமான் அஞ்சி.

வன்னியர்கள் தான் சேர, பல்லவ மன்னர்கள்…

வன்னியர்களை தான் க்ஷத்ரியர்ணு அரசு பதிவுல இருக்கு…..சேர, பல்லவ மன்னர்கள் அக்னி குல க்ஷத்ரியர்கள்…தமிழ் நாடு சாதி பட்டியலில்…வன்னியர்களை தான் அக்னி குல க்ஷத்ரியர்ணு சொல்லி இருக்கு…


http://ncbc.nic.in/backward-classes/tamilnadu.html


Vanniyakula Kshatriya (including Vanniya, Vanniyar, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya)

வேறு எந்த சாதியையும் க்ஷத்ரியர் என்று கூட சொல்லப்படவில்லை….

ஆயிரம் கதைகளை யார் யாரோ சொன்னாலும் உண்மையான அக்னி குல க்ஷத்ரியர் யார் என்று தெரிந்து தான் அரசு அங்கீகாரம் செய்திருக்கிறது…..

அக்னி குலமே முதல் குலம்.




அக்னி குலமே முதல் குலம். அக்னி குலத்தில் இருந்தே சூரிய, சந்திர, தீப, இந்திர குலங்கள் தோன்றியது. இந்து மதத்தை பொருத்தவரை அக்னியே முதல் கடவுள். எனவே தான் இந்துக்கள் சடங்குகளில் அக்னி முக்கிய இடத்தை வகிக்கிறது. யாகம் வளர்த்து அக்னியை வழிபட்டு தான் எல்லாம் சடங்குகளும் நடைபெறுகிறது. அக்னி மீது செய்யும் சத்தியம் கூட மிக முக்கியமாக கருதப்படுகிறது. இவ்வாறு அக்னி சாட்சியாக, அக்னியே முதலாக போற்றப்படுகிறது.

வன்னியர்கள் அக்னி குல க்ஷத்ரியர்கள் என்பதை இந்து மத புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் (வன்னிய புராணம்) உறுதி செய்கிறது. எவராலும் அழிக்கமுடியாத வரங்களை பெற்ற ஒரு அரக்கனால் தேவ முனிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் தேவ முனிகள் சிவ பெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்போது சிவ பெருமான் வடக்கே தவமிருந்த சம்பு மாமுனிவரை அழைத்து யாகம் வளர்க்க சொல்கிறார். சிவ பெருமானின் ஆணைப்படியே சம்பு மகரிஷியும் வன்னி மரத்தின் குச்சிக்களை கொண்டு யாகம் வளர்க்கிறார். சிவ பெருமானும் பார்வதி தேவியும் செங்கழுனீரை ஆவுதி நீராய் தர, அதை யாகத்தில் இட்டதும் ஒரு மாவீரன் கையில் வில் அம்பு மற்றும் வாளோடும் பூணூல் அணிந்து கொண்டு குதிரை மீது அமர்ந்தவாறு தோன்றுகிறார். இவர் வீர வன்னிய மகாராசன் என்றும் ருத்ர வன்னிய மகாராசன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரே பிறகு அந்த அரக்கனை அழிக்கிறார். அந்த வெற்றிக்கு பரிசாக இந்திரன் தனது மகள்களை வீர வன்னிய மகாராசனுக்கு கட்டி தருகிறார். ருத்ர வன்னிய மகாராசன் தென் இந்தியா முழுவதும் ஆட்சி செய்கிறார். இவரின் நான்கு மகன்கள் ஏற்படுத்திய சாம்ராஜ்ஜியங்களே சேர, சோழ, பாண்டிய, பல்லவ சாம்ராஜ்ஜியங்கள்.


இதன் பொருட்டே வன்னியர்கள் முதல் குலமான அக்னி குலத்தினை(சேர, பல்லவ) சேர்ந்தவர்கள் என்று கூறும் போதே அவர்களில் இருந்து தோன்றிய குலங்களே சோழ (சூரிய,இந்திர குலம்), பாண்டிய ( சந்திர குலம்) என்பது தெளிவாகிறது. இவை மட்டும் இல்லாமல் வன்னியருள் தீப குலத்தினை சேர்ந்தவர்களும் உண்டு. மேலும் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள் என்று அனைவரும் அறிவர். தமிழ்நாட்டின் ஒரே க்ஷத்ரியர்களும் வன்னியக்குல க்ஷத்ரியர்களே என்பதையும் அனைவரும் அறிவர். எனவே, வன்னியர்களே சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

Vanhikulakshatriyas are descended from the lineage of the mythical sage,Agnirasa who adopted agni as his son, state that the sage, sambuconducted a Fire sacrifice, and from it emerged the hero Rudra Vanhi. Rudra Vanniyar's Four sons were the ancestors of the four great kingdoms of the south, the Pandya, the Cheras, the Cholas, the Pallavas. To this martial and royal lineages belong the VanniyakulaKshatriyas.


வன்னிய அரசர்கள் காந்தவராயன் & சேந்தவராயன்



செங்கற்பட்டு மன்னன், கலம்பக புகழ்ப் கொண்ட காந்தவராயனுக்குச் சிலை அமைக்கவேண்டுமென பல்லாண்டுகளாக மக்கள் கூறி வருகின்றனர். உவமை கவிஞர் சுரதா "வன்னிய வீரன்" என்ற தலைப்பில் காவியம் எழுதி உள்ளார். அவ்வரசனை பற்றிய வரலாறு.

செங்கற்பட்டிற்க்கு அருகாமையில் திருவிடைச்சுரத்தினை காந்தவராயன், சேந்தவராயன் என்ற இரட்டை வன்னியக்குல பள்ளி மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஏறக்குறைய கி பி 1520 இல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவர் கட்டளைக்கு இணங்க மறுத்து வணங்கா முடியர் ஆயினார் இரட்டையர்.

வரி தர மறுத்த மன்னர்களின் மணி முடியை அடக்கிய கிருஷ்ண தேவராயருக்கு இவர்கள் அடங்காது சிம்மா சொப்பனமாக விளங்கி வரி தராதது மனதில் மருட்சியை உண்டாக்கியது.

தென் வடக்காக 1149 அடி, கீழ் மேற்காக 2000 அடி, அலங்கச் சுவர் அகலம் 20 அடி, இதற்க்கு 30 அடி அகழி சூழ் கோட்டை, இக்கோட்டைக்குள் ஓர் உள் கோட்டை. உள்கோட்டையும் அரண்மனையும் மலை மேல் அமைத்து ஏட்டில் எழுதவென்னா ஆற்றலோடு ஆண்டு வரும் வன்னிய மன்னராகிய நம்மிடம் அந்நியன் வரி கேட்பதாவது, நாம் கொடுப்பதாவது என ஆர்ப்பரித்தனர். கிருஷ்ண தேவராயர் இரட்டையார் மேல் பெரும் படையை ஏவினார், மடை திறந்த வெள்ளம் என மாற்றான் அனுப்பிய படைகள் காந்தவராயன் இருக்குமிடம் தெரியாது கலங்கினார்.

போர் முனையில் காற்றென விரையும் போர் புறவியேறி காட்டாறு விரைவிலே கலக்கி, கிருஷ்ண தேவராயர் படையை முறியடித்து போர் கொடி உயர்த்தினான் புலி மறவன் காந்தவராயன். கிருஷ்ண தேவராயர் படை நான்கு திங்கள் முற்றுகையிட்டும் என்ன? ஆந்திரம் தமிழின் அடி வீழ்ந்தது. வன்னியரை அவர் தம் ஆட்சியை பொறாத அந்நிய முதலியின் சொல்படி உய்யாள்வான் என்ற பாளையக்காரன் கிருஷ்ண தேவராயன் ஆணைப்படி ஆறு மாதம் போரிட்டும் வீறு காணாது தோல்வியை தழுவினான்.

வன்னியரின் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத அந்நிய முதலி, மன்னன் கிருஷ்ண தேவராயனிடம் ஒரு சூழ்ச்சி மூட்டையை அவிழ்த்தான். அதற்க்கு பதிலாக ஒரு பொன் முடிப்பும் பெற்றான். வெருகூர் நோக்கி சென்ற குப்பாச்சி என்ற ஆடல் மகளை அழைத்து வந்து கிருஷ்ண தேவாராயனிடம் விட்டான். காந்தவராயன் தலையை எனக்கு கொண்டு வந்து தந்தால் பதினாயிரம் பொன் பரிசு ! இயலுமா? என்றான் கிருஷ்ண தேவராயன். சரி என்றால் குப்பாச்சி. காந்தவராயனிடம் சென்றாள், வாள் முனையில் வெல்ல முடியாத அவன் ஆண்மையை விழி முனையில் மயக்கத்தில் ஆழ்த்தி, வாயில் அமுதம் கையில்

கனிச்சாற்றொடு நஞ்சு கலந்து, காந்தவராயனுக்கு தந்தாள் அந்த வஞ்ச மகள். இறந்த காந்தவராயனின் மணி முடியை துண்டித்து கையில் எந்தி கிருஷ்ண தேவராயனின் மெய் சிலிர்க்க அவன் காலடியில் கிடத்தினான். போலி வெற்றி பெற்ற கிருஷ்ண தேவராயன் புன்னகை பூத்தான்.

கருகியது காந்தவராயன் ஏற்றிய மறம், கன்னி தமிழ் இரட்டையரின் கலம்பக கொண்ட மாவீரன் காந்தவராயனின் சேந்த மேனியை செந்தணல் தழுவியது. ஒப்பந்த படி ஒரு பதினாயிரம் பெற்றாள். தலை தந்த வேசிக்கு விலை தந்தான் கிருஷ்ண தேவராயன். அவன் ராஜதந்திரி.

வீர புகழ் சுமந்த காந்தவராயனின் முடிவு சேந்தவராயன் உடலின் செங்குருதி கொதித்து கொப்பளித்தது. இடியோசை கேட்ட நாகமென அண்ணன் மடிந்த அவலத்தால் மண்ணில் வீழ்ந்து மயங்கினான், துவண்டான், துடித்தான், பதறினான்.

சபதம் மேற்கொண்டான் சேந்தவராயன். கிருஷ்ண தேவராயன் மேல் போர் தொடுத்தான். குகையை விட்டு பழியொழிக்க புறப்படும் சிங்கம் போல் புறப்பட்டு சென்று கிருஷ்ண தேவராயனின் படைகளை கண்ட துண்டமாக்கி எண்டிசையும் சிதறி ஓட முறியடித்தான் அந்த வன்னிய மாவீரன். சதியால் தன் அண்ணன் காந்தவராயனை கொன்ற ஆடல் அழகி குப்பாச்சியையும் அவள் உறவுகளையும் கொன்று அவர்கள் தலைகளை ஏரியில் மிதக்க விட்டான் சேந்தவராயன். பிணா ஊர் என்றும் ஏரிக்கு பிணா ஏரி என்றும் இன்றும் பெயர் வழங்குகிறது. அவள் இருந்த இடம் குப்பாச்சி மேடு என்று இன்றும் வழங்குகிறது.

திருவிடைச்சுரத்தில் இன்றும் அந்த வன்னிய அரசர்களின் கோட்டை இருக்கிறது.

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

மலையமான்கள் வன்னியக்குலத்தவரே

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

வன்னியர் அக்காலத்திற் படைக்கலப் பயிற்சியைச் சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் க்ஷத்ரியர்கள் என நூல்கள் வருணித்தன. வன்னியரின் சிறப்பை எடுத்துரைக்குமிடத்தில் சிலை எழுபது நூல் இவ்வாறு கூறும்:


படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ
வெனலுடையர், நடையுடையார் மிடியுடைய
நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார்
மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப் படையுடையார்
வன்னியர் பிறரென்னுடையார் பகரிரே


சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பது குறிப்பிடத்தக்கது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்ட கிழியூர் மலையமான்களையும் பல்லவ மரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது. இக்குறுநில மன்னர் வன்னியராயிருந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமாயுள்ளன.