தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்
மழவராயர்,மானங்காத்த மழவராயர் போன்ற பட்டங்கள் வன்னியருக்குண்டு.எந்த வகையில் பார்த்தாலும் இப்பட்டம் நமக்கு சாலப்பொருந்தும்.
மழவராயர் = மழவர் +அரையர்
மழவர் தலைவர் என்பது இதன் பொருள். மழவர் என்பவர் யார்?
அவர்கள் ஒர் போர்க் குடியினர்.
மழவர் தாயகம் எது தெரியுமா? மழகொங்கம் எனப்பட்ட பகுதி.இது தருமபுரி,நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.
தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் மழவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரியை ஆண்ட அதியமான் மழவர் மரபினன்.
மழவர் அடிப்படையில் சேரர் தொடர்புடையவர்கள்.
சேரர் குலச் சின்னம் - வில்
மழவர் குலச் சின்னம் - வில்
வன்னியர் குலச்சின்னம் - வில்
வன்னியர் குல சின்னம் வில் என்பதும்,வன்னியர்களின் வில் சிறப்பு பற்றி கம்பர் எழுதிய வன்னிய மன்னன் கருணாகார தொண்டைமானை பற்றிய "சிலையெழுபது" என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். ருத்ர வன்னிய மஹாராஜா கையில் வாளோடும், வில்லோடும் பிறந்தவர் என்று வன்னியர் புராணம் சொல்வதும்
குறிப்பிடத்தக்கது.
மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள் பின்வருமாறு தம் நூல்களில் கூறியுள்ளனர்.
வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.
"தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.
இன்னொரு செய்தி :அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர் அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.
சேரர் அக்னிகுலக்ஷத்ரியர் என்பதும் வன்னியர்கள் அக்னிகுலக்ஷத்ரியர் என்பதும். அரியலூர் ஜமீன்தாரான மழவராயர் வன்னிய குலத்தினர் என்பதும், மழவரும் சேரரும் வன்னியர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மழவர் வன்னியர் என்பதால் பழுவேட்டரையரும் வன்னியர்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மழவர் சேரரின் கிளைப் பிரிவினர்.பழுவேட்டரையரும் சேரனாட்டுத் தொடர்புடையவர், மழவர் என்பதால் அவர் வன்னியர் என்று உறுதியாகக் கூற இயலும். மேலும் இவர்கள் "மகரிஷி வம்சத்து ஷத்திரியர்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.இதுவும் அவர்கள் வன்னியர் என்ற கருத்தை உறுதிபடுத்துகிறது.
எனவே, பழுவேட்டரையர்கள் வன்னியக்குலத்தவரே.