Friday 6 May 2011

வன்னியர் ஆட்சியில் விளந்தை

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் அருகே சுமார் 2 அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விளந்தை எனும் ஊர்.இவ்வூரை பிற்கால சோழர் ஆட்சியின் இறுதி தொடங்கி வன்னியர்கள் ஆண்டு வந்துள்ளனர்.இதனை கல்வெட்டாதாரங்கள் உறுதி செய்கின்றன.


விளந்தை கச்சிராயர்:


இவர்கள் வன்னிய குலத்தவர். கி.பி.16 ஆம் நூற்றாண்டளவில் விளந்தையை ஆட்சி செய்தவர்கள்.

வெட்டுங்கை அழகிய கச்சிராயர், சேவகப் பெருமாள் கச்சிராயர் போன்றோர் இம்மரபின் ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள்,குறிப்புகள் இவர்கள் ஆண்டதை உறுதி செய்கிறது.

கச்சிராயர் தலைவருள் ஒருவரான சேவக்ப் பெருமாள் கச்சிராயர் பற்றி கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் முன்மண்டப வாசல் பழுதுபட்டபோது அதனை திருத்தி அமைத்துள்ளார் சேவகப்பெருமாள் கச்சிராயர்.

கல்வெட்டு வாசகம்: "ஸ்வஸ்தி ஸ்ரீ இந்த விக்கிரம சோழன் திருவாசல் முறிந்து விழுகையில், பின்பு விளந்தையில் சேவகப் பெருமாள் கச்சிராயர் திருப்பணி இராகுத்த மிண்டன்"

இக்கச்சிராயர் வழி வந்தோர் இன்றும் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

விளந்தையில் கச்சிராயர்களின் ஆட்சி 17 ஆம் நூறாண்டின் இறுதிவரை நீடித்தது. கச்சிராயர்களுக்குப் பிறகு விளந்தை மற்றொரு வன்னியகுல தலைவரின் கீழ் வந்தது.இவர்கள் வாண்டையார் எனும் பட்டப்பெயர்கொண்டோர் ஆவர்.