Wednesday 26 December 2012

சோழ மன்னர் முடிசூட்டப்பட்ட 34 வது ஆட்சி ஆண்டில் அவரை வாழ்த்தி வணங்குகிறோம்

திரு. ஏ. கே. சுடர்மணி அவர்களுக்கு நன்றி  

சோழ மண்டகப்படி விழா

சோழ மண்டகப்படி விழா அழைப்பிதழ் (26-12-2012) அன்று மாலை மலர் சென்னை பதிப்பில் வெளிவந்த விளம்பரம்.

Tuesday 18 September 2012

சென்னப்ப நாயக்கர் பட்டினம்




 காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_6700.html

நன்றி  ; வன்னியர் வரலாற்று ஆய்வு மையம்
               திரு . அருள், பசுமை தாயகம்  



வன்னியர் செப்பு பட்டயம் ( சோம சூரிய அக்கினி வம்சம் )



வன்னியர் செப்பு பட்டயம்

நூல்  : வன்னியர், திரு. நடன. காசிநாதன்


செப்பு பட்டயம் எண் 10
காலம் :  சகம் 1563   , கி பி 1641  ஆங்கிரச ஆண்டு
குறிப்பு  : வன்னி குலாதிக்கம்  1966  பக்கங்கள்  40    - 45  


அரசர் மல்லிகார்சுன  தேவமஹாராயர்

செய்தி :  பல இடத்து வன்னியர்கள் ஒன்று சேர்ந்து வில்லவ நல்லூரில்  மடம் கட்டுவதற்காக ராஜவன்னிய ராஜா மல்லிகார்சுன தேவ மக்ராயரிடம் அனுமதி பெற்று வந்ததையும் மடம் கட்டும் பொருட்டு ஒவ்வொருவரும் எவ்வளவு பொருள் தரவேண்டும் என்று முடிவு செய்ததையும் விளக்கு கிறது  மேலும் பல்வேறு  விதமான திருமணமுறை அக்காலத்த்தில் நடைமுறையில்  இருந்ததையும் மன்னவேடு கிராமத்தார் எந்தெந்த வகையில் வரி எவ்வளவு செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்ய பெற்றிருந்தமையும்  குறிப்பிடுகிறது .

பட்டய வாசகம் :

சுபஸ்ரீ மஹா மண்டலத்தில் சுவர்ண அரியராய விபாடன் பாஷைக்கு தப்புவராத கண்டன் மூவராய கண்டன்
கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் , துடுக்கர் தளவிபாடன் துடுக்கர் மோகந்த விர்த்தோன், ஒட்டியர் தளவிபாடன் , ஒட்டியர் கொட்டந்த் தவிர்த்தோன், பின் மண்டலமுங் கொண்ட இராஜாதி ராஜன், இராஜ பரமேஸ்வரன், இராஜ மார்த்தாண்டன்,இராஜேஸ்வரன் , புயங்கன் , இராஜகம்பீரன் , இராக்கன்த்தம்பிரான் , இந்திர துரந்த (ர ) ன் . அஸ்வபதி கஜபதி துரந்தான்  அஷ்ட மனோகர இராயன், அசுராண விருது, நரபாலன் , கோதண்ட இராமன் , கலியுக இராயன்கண்ணன், வாளுக்கு வீமன் தோளுக்கு அபிமன்னன் , குணத்திற்கு தருமன், அழகுக்கு அ நங் கன், அமர்ந்தாற்கு  அரிச்சந்திரன் , ஆண்மைக்கு அனுமான், ஆக்கினைக்குச சுக்ரீபன் , கொடைக்கு கர்ணன் , செல்வத்திற்கு அளகேசுவரன், பலத்திற்கு வாயு பகவான் , உலகுக்கு கதிரோன் உலாவும் உலகமெல்லாம் படைக்க நினைத்தருளிய வீராதிவீரா வன்னியப் பிரதாபன் , கிருஷ்ணதேவ மஹாராயர், திருமலை தேவ மஹா ராயர் , நரசிங்க தேவ மஹா ராயர் இராம தேவ மஹா ராயர் , பிராவிட தேவ மஹா ராயர் , மல்லிகார்சுன தேவ மஹா ராயர் பிரிதிவி இராச்சிய பரிபாலனம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1563  இதற்கு மேல் நின்ற ஆங்கீரச வருஷத்து மிதுன  மாசத்து பூர்வ பட்சத்து அஷ்டமியும் பூராட்டாதி நட்சத்திரமும்
பெற்ற சோமவார நாள் , வடகரை விருதப்பசங்கன்  வளநாட்டுக்கு மேற்கு நாடு இருங்க கோள பாண்டி வளநாடு , தொண்டை மண்டலம் , சோழ மண்டலம் , பாண்டிய மண்டலம் , கொங்கு மண்டலம்  இந்த நாலு மண்டலத்திற்கு அழகான தொண்டைவள நாட்டுக் கழகான வில்லவனல்லூர் திருக்காமேஸ்வரர் குயிலாரம்மை அவர்கள் சந்ததியாகிய வில்லவனல்லூரிலே அந்தந்த சாதிக்கு மடாலயங்கள் உண்டாகின்றன. நமக்கு சிவாலய பூசை மாத்திரமிருகின்றது. தென் தேசத்தில் நமது வம்ச பன்னாடர் தங்கள் பேரும் பிரதாபமும் உண்டாகவேண்டுமென்று மடங்கள் கட்டியிருக்கிறார்கள். நாம் இராயரைபோய் கண்டு மடங்கட்ட உத்தரவு பெற்று வருவோமென்று திருவக்கரை வல்லவநாட்டு மழவராய பண்டாரத்தார், கருத்த நாயனார் பண்டாரத்தார், சின்னகுமார நாயனார் பண்டாரத்தார், சிதம்பர மழவராய பண்டாரத்தார் கச்சி இராயர் பெரியண்ன நாயனார்   சிற்றம்பல நாயனார் தாண்டவ நாயனார் சடையப்ப நாயனார் அழகு சிங்க நாயனார் மெய்யோக நாயனார் பண்டாரத்தார் இவர்களும் கண்டன்மார் தந்திரியார் படையாக்ஷியார் என்னும் பல பட்ட பெயர் பெற்ற சோம சூரிய அக்கினி வம்ச பண்ணாடரான உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய இராஜ ஸ்ரீ மல்லிகார்சுன தேவ மஹா ராயரைக்   கண்டு பேச அப்போது இராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி நமது வம்சத்தாரென்று தெரிந்து தேவாலய பூஜை யிருக்க மடத்து தருமம் நமகேனென்று இராயரும் கேட்க அப்போது நாயனார் பண்டாரத்தார் பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் முதலிய மற்ற மண்டலங்களில் குரு மடங்கட்டியிருக்க தொண்டைமண்டலதிலேயும் இருக்க வேண்டுமென்றார்.இராயரும் சந்தோஷித்து உங்களுக்கு இடமில்லாமற் போமோவென்று தானத்தாரையழைத்து நாயனார் பண்டாரத்தார் அவர்களுக்கு இடம் விடப்போமென்று சொல்ல அப்போது தானத்தார் மூத்த முதலியார் திருநாகத்தொண்டை முதலியார் நம்பித திருஞானப பண்டிதர் மற்றும் முற்றாற்றுடையார் நம்பிக்குருக்கள் வயித்தியநாத குருக்கள் கோவில் கணக்கு ஷேமக்கணக்கு மற்று முண்டான தானத்தார் தலதாருங்க்கூடி கெவிசித்த லிங்க தேவர் முளைய தேவர் தம்பிரானார் திருநாமத்தில் காணியான தெற்கு தெருவில் தேரோடும் வீதியில் தென் சரகில் பாலையர் மடத்திற்கு கிழக்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்திற்கு மேற்கு சட்டையர் மடத்திற்கு வடக்கு அடி கிழக்கு மேற்கு 75   தெற்கு  வடக்கு அடி 15  அடி ஒன்றுக்கு பொன் ஒன்றாக 75  பொன்னுக்கு கிரையங் கொண்டு கல்லில் பேர்வெட்டி நட்டு கிணறுகட்டி மடங்கட்டி  தாம்பர சாஸனமாக பட்டையமெழுதி நாலு மண்டலம் 54 தேசமுங் குருமூர்த்தமாய் கொண்டாடசொல்லி மஹா மட பிச்சை முட்டியும் திருவிளக்கும் திருநந்தவனப பணிவிடையும் திருமாலையும் உபயமும் மகேஸ்வர பூஜையும் பண்ணி நடத்தி வர சிலா நதி சக்கரவர்த்தி யோகீஸ்வர குருவை மடத்தில் வைத்து அந்தந்த சீர்மைப பண்ணாடரும் நாயனார் பண்டாரத்தார் அனைவரும் வம்ச தரும கீர்த்திகாக மடத்திற்கு கட்டளையிட்டது உபநய முகூர்த்தத்திற்கு பணம் ஒன்றும் , சுயம்வரம் நாட்டி மாலை சூடுங் கலியாணத்திற்கு பொன் பத்தும் , கத்தி நாட்டி காலியான ஞ்  செய்பவருக்கு பணம் பத்தும் , மற்ற முகூர்த்தங்களுக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் பணம் ஒன்றும் , பெண் வீட்டார் பணம் ஒன்றும் , பெண் தந்த பணம் ஒன்றும் , மாதா பிதா குரு பாத பூஜை வரும்படிகளும் மடத்தில் சேரவேண்டியது.  தண்டிகை துரைகள் பணமும், குதிரை மேற் குடைபெற்ற அஸ்வபதிகள் அஞ்சு பணமும், ஜாதியில்  குற்றா குற்ற ஞ் செய்பவர் அபராத பணமும் மன்னவேடு கிராமத்தார் அரிவாளுக்கு ஆறுபடி தானியமும், களைவெட்டுக்கு பதக்கு தானியமும் ஏருக்கு முக்குறுணி தானியமும் , பேரூருக்கு பத்து பணமும், சிற்றூருக்கு அஞ்சு பணமும் கொடுக்க வேண்டியது. ஆதுபாது அற்றவர் சொத்தை மடத்தில் சேர்த்து மடத்தாரால் சவரட்சணை பெற வேண்டியது. இவ்வரும்படிகள் மடத்திற்கு சேருகிற படியால் செந்தூரத் திலர்தம் கோபி திருமணி திருநீறிட்ட பேர்களும் சந்திர சூரியருள்ள நாள்வரைக்கும் நடத்தி வருவீர்களாகவும்;  
 இந்த மடாலய தருமத்தை தங்காமல் கொடுத்தபேர்கள் மாதாப்பிதாக்களை இரட்சித்து சிவாலயம் பிர்மாலயம்  பூதானம் கோதானம் கன்னிகாதானம் செய்த பலனை பெறுவார்கள் . ஸ்ரீ மது வில்லவனல்லூரிலே  திருக்காமேஸ்வரர் குயிலாரம்மை குமாரசாமி சந்நிதானம் விளங்குவது போல் விளங்குவார்கள். மடத்திரு அனுப்ப கட்டளையிட்டதை அனுப்பாவிடில் மடத்து சுவாமியாரால் அனுப்பப்பட்ட பணிவிடை சிஷியாள் எழுந்தருளின உடனே கூடி முன்னேபோய் காண்பித்து கொண்டு வந்தவர்களுக்கு விடுதிவிட்டு சாப்பாடு போஜனம் அமைத்து தருமத்திற்குண்டான வரும்படிகளை கொடுத்தனுப்பி வைக்க வேண்டியது. தருமபரிபாலரான சௌபாக்கிய பிரமாணிக்கரான வேள்வியில் பிறந்தோர்களான  ஸம்பு குலத்தவரான குமாரசாமியார் படைத்தலைவரான அசுரர்கள் மார்பரான ஆஸ்தான பந்துஜன சிந்தாமணிய ரான சாந்த மாரியுடைய கந்நிகையை மணஞ் செய்தவரான வாடாமாலையும் வன்னத்தடுக்கும் மாலையும் தரித்தவரான வாசமிகுந்த குவளை மாலையும் மிடக்கொடியும் முப்பத்திரண்டு விருதுகளும் பெற்றவர்களான முன்னூல் மார்பும் புலிக்கொடியும் பெற்றவரான நையா நாட்டுக்கு சப்தபதிகளான சோணாடு காத்தவரான மறையோர் மகனுக்கு உயிர் கொடுத்தவரான வல்லானுடைய மகுடந் துணித்தவரான வாதாபியை வென்ற வன்னியகுலாதிபரான செங்கையில் வில்லும் சிலீமுகமும் எடுத்தவரான ஏரடி வாழும் வீரப்பரி நகுல துஷ்ட நிர்தண்ட விர்ப்பன்ன உத்தண்ட கோதண்ட விக்கிரமார்தாண்டரான அனைவோரும் மனமொத்து இந்த காரியம் தட்டுதலை பண்ணுவ தல்லவென்று மடத்து தருமம் விளங்கத தக்கதாக பார்க்கவும் யாதாமொருவர் அகடவிகடம் பண்ணினால் கங்கைகரையில் காராம்பசுவை கொன்ற பாவத்தில் போககடவர். தங்களுடைய மாதாபிதாக்களை கொன்ற தோஷத்திலேயும் தெய்வ பிராமணரை கொன்ற பாவத்திலேயும் போக கடவர் . தருமம் விளங்க குலம் விளங்கும் ; குலம் விளங்க பெருமையும் செல்வமும் பதவியும் அடைவார்கள். 

Thursday 16 August 2012

"வரலாற்று புலி" தி.வை. சதாசிவ பண்டாரத்தார்



"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
தாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.      

இந்திய விடுதலை போராட்ட வீரர் "சர்தார்" அதிகேசவலு நாயக்கர்

இந்திய விடுதலை போராட்ட வீரர்  "சர்தார்" அதிகேசவலு நாயக்கர் 

இந்திய தேச விடுதலைக்காக 11 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். காந்திஜி அவர்களிடம் "சர்தார்" பட்டம் பெற்ற  வன்னியகுல க்ஷத்ரியர் காந்திஜியின் வரிகொடா இயக்கத்தில் பங்கு கொண்டதால் சென்னையில் இருந்த தனது பலகோடி மதிப்பிலான சொத்துக்களை ஆங்கில அரசு கைப்பற்றியபோதும் தொடர்ந்து செயல்பட்டவர். காந்திஜி, திலகர், பாரதியார் போன்றவர்களை அழைத்து சென்னை மெரீனா கடற்கரையில் சுதந்திர போராட்ட எழுச்சி மாநாடு போட்டவர். இன்றும் மெரினாவில் இருக்கும் திலகர் திடல் கல்வெட்டில் இவர் பெயர் இருக்கிறது. 


ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்




சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் மிகவும் ரம்மியமாய் கடற்கரையை பார்த்து கொண்டே செல்லும் வகையில் இருக்கும் ஆயிரம்காணி நிலத்திற்கு சொந்தக்காரர் வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தில் உதித்த திரு. ஆளவந்தார் நாயகர் அவர்கள்.

வைணவத்தில் ஈடுபாடு கொண்டு பிரம்மச்சரியத்தை கடைபிடித்த இவரின் சமாதி இவரின் நிலத்திலேயே இருக்கிறது. தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இவரின் அறக்கட்டளை நிலமே பயன்படுத்த படுகிறது. நெமேலி மற்றும் பட்டி புலத்தில் இவரின் நிலங்கள் உள்ளது. மற்றொரு பகுதி நிலம் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நாட்டிய பள்ளி கட்டிக்கொள்ள இந்து அறநிலைய துறை ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையில் இருந்து பெற்று தந்திருக்கிறது.








ஆளவந்தார் நாயகர் அவர்களின் ஜீவ சமாதியும் ஆலயமும் 

திருமணம் செய்து கொள்ளாத நாயகர் அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ஜீவா சமாதி ஆகிவிட்டார். அவரின் நிலத்திலேயே அவருக்கு ஆலயம் இருக்கிறது.

இவருடைய பிறப்பு : 1835 

இறப்பு ; 8  . 8  . 1914 

ஊர் : கோவளம் 

தந்தை : வேங்கடபதி நாயகர் 

தாயார் : அகிலாண்டம்மாள் 

இயற்பெயர் : தம்பிரான் 

சொத்துக்கள் : 1039.27 ஏக்கர் 


அனைத்து சமுதாய மக்களுக்கும் தான் சம்பாதித்த பணத்தில் உதவிகள் செய்த நாயகரின் புகழ் வான் உள்ளவரை நிலைத்திருக்கும் 

அய்யா மாணிக்கவேலு நாயக்கர்


அய்யா மாணிக்கவேலு நாயக்கர் அவர்கள். 1952 பொது தேர்தலில் வன்னியர் வலிமையை படையாட்சியார் போல உலகிற்கு உணர்த்தியவர். வட ஆற்காடு மாவட்டங்களில் பல இடங்களில் இவரின் கட்சி வெற்றி பெற்றது.  தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாக ஆட்சி அமைக்க முடியாத காங்கிரெஸ் கட்சி இவர் தந்த ஆதரவில் தான் முதன் முதலில் ஆட்சி அமைத்தது. ராஜாஜி அவர்கள் முதல்வர் ஆக இவரே காரணமாக அமைந்தார். தமிழக மேல்சபை தலைவராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.    


M. Alagappa Manickavelu Naicker (December 14, 1896 – July 25, 1996) or simply, M. A. Manickavelu was an Indian politician of the Indian National Congress. He served as the Minister of Revenue for the Madras state from 1953 to 1962. He also served as a member of the Rajya Sabha from 1962 to 1964. During 1964-70 he as the Chairman (presiding officer) of the Tamil Nadu Legislative Council

Early life

Manickavelu was born to M. Alagappa Naicker on December 14, 1896. Alagappa Naicker belonged to the numerically strong Vanniyar community of North Tamil Nadu. Manickavelu graduated in arts and proceeded to qualify as a lawyer. Manickavelu entered politics early in life and became a member of the Swarajya Party faction of the Indian National Congress. In 1926, he was elected to the Madras Legislative Council.

Manickavelu served as a member of the Madras Legislative Council from 1926 to 1937. In 1951, he founded the Commonweal Party which represented Vanniyar interests in Chingleput and North Arcot districts. In 1951, he contested in the 1951 elections, the first held in independent India as a candidate of the Commonweal Party, and was elected to the assembly once again. Naicker was appointed Minister of Land Revenue and served from 1953 to 1962. When Rajagopalachari stepped down as Chief Minister and was succeeded by Kamaraj, Naicker dissolved the Commonweal Party and merged his organisation with the Indian National Congress. He served as a member of the Madras Legislative Assembly till 1962 when he was elected to the upper house of India's Parliament, the Rajya Sabha. He served as a member of the Rajya Sabha from 1962 to 1964.

சென்னை கிண்டியில் இருக்கும் படையாட்சியார் அய்யா சிலை



சென்னை கிண்டியில் இருக்கும் அய்யா எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்  சிலை.  இவர் 1952 இல் நடந்த பொது தேர்தலில் வன்னியர் வலிமையை உலகிற்கு உணத்தியவர். பெருந்தலைவர் காமராஜரின் மந்திரிசபையில் அங்கம் வகித்தவர்.     

சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு


வன்னியகுல க்ஷத்ரிய மாமன்னர் கரிகால் சோழர்


வன்னியர் வரலாற்று பதாகைகள் - திரு. ஆறு. அண்ணல் கண்டர், திரு. நா. முரளி நாயக்கர்





















இந்த வன்னியர் வரலாற்று பதாகைகளை வன்னியர் உறவுகள் வன்னியர் சங்க கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களில் பயன்படுத்தி ( உங்கள் பெயரை போட்டு பயன்படுத்திகொள்ளலாம்) கொள்ளுங்கள்.

Source:

http://annalpakkangal2.blogspot.in/2012/08/blog-post.html 

Saturday 28 July 2012

வன்னியர் குருபூஜை - இசை நிகழ்ச்சி அழைப்பு சுவரொட்டி


வன்னியர் குருபூஜை - இசை நிகழ்ச்சி அழைப்பிதழ்


வன்னியர் குரு பூஜை - வர்மாவுக்கு பிறந்தநாள் ( 27 சூலை)


வன்னியர் குருபூஜை 


இந்திய சுதந்திர போராட்ட வீரரும், ஆன்மீகவாதியும், பாரதியார் இறந்தபோது அவருக்கு இரங்கற்பா பாடிய ஒரே மனிதர். இரண்டாம் தேசிய கவி, ராஜாஜியால் அன்போடு ராஜரிஷி என்று அழைக்கப்பட்டவருமான வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தின் குல குரு, வன்னியகுல தெய்வ திருமகன் சேலம் சு. அர்த்தநாரீச வர்மா அவர்களின் 139 ஆவது பிறந்தநாள் குருபூஜை விழா அவர் மறைந்த அக்னி இஸ்தலமான திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது  . அன்று மாலையில் தேசியத்தையும் சமூகத்தையும் போற்றிய வர்மா அவர்கள் இயற்றிய படையாட்சியார் பாடல்கள் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அய்யாவுக்கு பிறந்தநாள் ( 25 சூலை )




நாற்படை கொண்டு பல நாடுகள் ஆண்ட பன்னாட்டார் வம்சமே.
..
அக்னியில் உதித்த மற்றொரு வீர வன்னிய மகராசனே.
.. 
வாழ்வாங்கு வாழ்ந்து பின் சூழ்ச்சியில் வீழ்ந்த சமுதாயத்தை 
விடியலை நோக்கி மீண்டும் படையெடுக்க செய்த எங்கள் படை தலைவரே 
..
தனி ஒரு மனிதனின் கோபம் ஒரு சமூகத்தை முன்னேற்றும் என்பதை காந்தி, மண்டேலா, தந்தை பெரியார் வழியில்
உலகிற்கு உணர்த்திய எங்கள் பெருந்தலைவரே..
..
எவருக்கும் அடங்காத முரட்டு கூட்டத்தை தன் விரல் அசைவில் இயக்கும் எங்கள் அன்பு ஆசானே.
..
திண்டிவனம் தந்த திருவிளக்கே
சஞ்சீவராய கவுண்டர் - நவநீதம் ஆயாளின் அருந்தவ புதல்வரே.
..
தமிழை வளர்க பொங்கு தமிழ் கண்ட எங்கள் பொக்கிஷமே.
..
உரிமை போரை உலகமே வியக்க நடத்தி காட்டிய எங்கள் போர் மன்னனே.
..
சமூக நீதி காக்க நுழைவு தேர்வை ரத்து செய்த சமூக நீதி போராளியே.
..
மக்கள் நல்வாழ்வுக்கு இந்திய முழுவதும் 108 அவசர ஊர்தி கொண்டுவந்த மக்கள் காவலரே.
..
ஒரே நாளில் அரியலூரில் ஏழு அம்பேத்கர் சிலை திறந்த சமூக நல்லிணக்க போராளியே.
...
கோவையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக போட்ட தடா சட்டத்தை எதிர்த்து போராடி
சோதனை சாவடிகளை அகற்ற கூறி சிறை சென்ற சிறுபான்மை காவலரே
..
பிற்படுத்த மக்களுக்காக மத்தியில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்று தந்த இட ஒதுக்கீட்டு நாயகரே.
..
கோடிக்கணக்கில் மரங்களை நட்டு பசுமை படைத்த பசுமை படைப்பாளியே.
..
என்றென்றும் தாங்கள் பாட்டாளியே.
...
ஏழைகளின் குரலாய் ஒலிக்கும் எங்கள் தெய்வ திருமகனே.
...
எம் பி சி யில் 108 சாதிக்கு இட ஒதுக்கீட்டை பெற்று தந்த நீதி காத்தவரே.
..
தங்களின் இந்த இனிய பிறந்தநாள் தமிழினத்தின் பொன்னாள்.
தாங்கள் சீரும் சிறப்போடும் நலத்தோடும் வளத்தோடும் பல்லாண்டு வாழ்ந்து தமிழின போராளியாய், தமிழ் குடி தாங்கியாய் தமிழ் நாட்டை காக்கவேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறேன் அய்யா.

என்றென்றும் உங்கள் வழியில் நாங்கள்.

Friday 6 July 2012

ஊடகங்களுக்கு வன்னியர் வரலாற்று ஆய்வு மையத்தின் நன்றி


Thursday 5 July 2012

"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.

சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே என்பதை தனது "தென் தேச யாத்திரை" என்னும் கட்டுரையில் இனவரைவியலாளர் திரு. ஆறு. அண்ணல் கண்டர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.   
  
அவரின் கட்டுரையில் இருந்து சில வரிகள்:
 
வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை "வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012 அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012 ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட "வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.


1925 ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார். இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை உறவினர்கள் சிவகிரி ஜமீனாக நியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.


அரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன் சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும் திருமதி. பால குமாரி நாச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள் அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
சிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார்.
சிவகிரி அரசர்கள் "வன்னியகுல க்ஷத்ரியர்கள்" என்று கூறும் அவர்களது சொத்து பத்திரம்.

இன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர் பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்.


நன்றி: திரு. ஆறு. அண்ணல் கண்டர்    


Source: 
http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_3995.html

சிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சிவகிரி காதல் என்னும் நூல்.


வரகுணராமன் புகழ்ப்பாடும் சிவகிரி காதல் என்னும் நூல் 

"வன்னிய குல தீப வரகுணராமப் பாண்டிய 
மன்னனென்த் தென்மலையில் 
வாழ்வேந்தர் வெச்சரிகை."

என்றும் 

"வன்னியகுலராச வரகுணராமப் பாண்டிய 
நன்னயவான் வாராமல் நங்கை 
மயங்கி சேர்ந்தாள்."

என்று கூறியிருக்கின்ற பாடல் வரிகளில் சிவகிரி வரகுணராமப் பாண்டியனை "வன்னியகுலத்தின் ஒளி விளக்கே" என்றும் "வன்னியகுல அரசன்" என்றும் கூறியுள்ளதை காண்க.
                    
நன்றி: தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன் .    

சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்



பழனியில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக  என்று 'வன்னிய பெருங்குலம்' நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார். 

அங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த "லோக குருசாமி" 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட்... மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.

இவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக  பட்டம் எற்றுருக்கிறார் என்று தெரிகிறது.

இன்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் நகரில் கணிசமான அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்பாசமுத்திர நகரமன்ற உறுப்பினராக வன்னியர் ஒருவர்  இருந்து வருகிறார்.  

நன்றி : தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன்.

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வன்னியர்கள் செய்து வரும் "பௌர்ணமி பூசை"

தென் தமிழ்நாட்டில் உள்ள அக்னிகுல க்ஷத்ரிய வன்னியர் சமூகத்தினர் ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் "பௌர்ணமி பூசை" செய்து வருகிறார்கள்.

இவ்விழா இக்கோவிலில் இப்பகுதியில் வாழ்ந்த வன்னிய பாளையக்காரர்களுக்கு இருந்த உரிமையாகும். இதை இந்நாளில் மதுரையின் தென் பகுதியில் இருக்கும் வன்னியர்கள் செய்து வருகிறார்கள்.

நன்றி : 'தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு', திரு.நடன. காசிநாதன்  

Monday 2 July 2012

என் தென் தேச யாத்திரை

 நன்றி : திரு அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.com/2012/05/blog-post_3995.html
 ===================================================================

என் தென் தேச யாத்திரை

இது புகழ் பெற்ற பழைய தொடர் கட்டுரை ஒன்றின் தலைப்பு. தற்போது
( ஏப்ரல் 2012 - அதாவது இந்த கட்டுரை எழுதும் போது) ஜூனியர் விகடனில்
ஜி. ராமகிருஷ்ணன், எனது இந்தியா என்கிற தலைப்பில் எழுதி வருகிறார்
அல்லவா ! இதை போலவே, 1930 களில் சுதேசமித்திரன் இதழில் திரு.உலகநாத நாயகர் என்பவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர். மேலும் வன்னியகுல க்ஷத்ரிய மகாசங்கத்திலும் சேவையாற்றி வந்தார். அவர் எழுதிய தொடர் கட்டுரையின் தலைப்பே எனது தென் தேச யாத்திரை. இந்த கட்டுரை தொடர் தனது எழுத்து பணிக்கு பெரும் தூண்டுதலாக இருந்தது என்று புகழ்பெற்ற சரித்திர நாவலாசிரியர் திரு .சாண்டில்யன் அவர்கள் புகழ்ந்து எழுதியதை எனது தந்தையார் கவிஞர் திரு.காவிரிநாடன் அவர்கள் உணர்வுபூர்வமாக குறிப்பிடுவார்.

ந்த படத்தில் இடமிருந்து மூன்றாவதாக அமர்ந்திருப்பவர் தான் திரு. உலகநாத நாயகர்.  படத்தில் உள்ள மற்றவர்களும் வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்திற்கு உழைத்தவர்களே.  1930 களில் இந்த நிழற்படம் எடுக்கப்பட்டது. ஸ்ரீ மான் "சம்புகுல வள்ளல்" சென்னை காட்டுப்பாக்கம் பா. ல. முருகேச நாயகரின் வாரிசு ஒருவரது  வீட்டில் இந்த படம் காணப்படுகிறது.   


சரி!இப்போது இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நானும் எனது மாப்பிள்ளை திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்களும் சுமார் 12 நாட்கள் பயணம் செய்தோம். அந்த பயணத்தின் முக்கிய செய்திகளை விளக்குவதால் இந்த கட்டுரைக்கு "எனது தென் தேச யாத்திரை" என்று தலைப்பிட்டேன்.

இந்த பயணத்திற்கு இரண்டு நோக்கங்கள். ஒன்று மூன்றாயிரம் ரூபாய் விலையுள்ள "க்ஷத்ரியன்" இதழ் தொகுப்பை promote செய்வது. இரண்டாவது தென் மாவட்டங்களில் வன்னியர் நிலை பற்றி அறிந்து கொள்வது.




தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஒருவரது மகனும் அச்சக அதிபருமான திரு. வேல் முருகன் அவர்கள் இப் பயணத்திற்கு பெரிதும் துணையாய் இருந்தார். குற்றால அருவிக்கு அருகிலேயே அறையும் எடுத்து கொடுத்திருந்தார். அவரது உதவியுடன் தென்காசியில் வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிக்கு சென்று பார்த்தோம்.

தென்காசி நகரின் மீன் வியாபாரம் வன்னியர்கள் கையில் தான் இருக்கிறது. குறுகலான தெருக்களை கொண்ட சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் பகுதி இது. இந்த பகுதிக்குள்ளேயே சுமார் 10 கோவில்களும் இருக்கின்றன.

பொதுவாக தென் மாவட்டங்களில் வசிக்கும் வன்னியர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. தென் பகுதி வன்னியர்களின் குல தெய்வ கோவில்களும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கின்றன.










தென் பகுதி வன்னியர்கள், அவர்கள் மற்றும் அவர்களது முன்னோர்களின் நினைவுக்கு எட்டிய காலம் தொட்டு தென் மாவட்டங்களில் தான் வசித்து வருகின்றனர்.

நாதஸ்வரம், மிருதங்கம் வாசித்தல், இசைக்கலையை  கற்பித்தல் மற்றும் உள்ளூர் நீர் நிலைகளை குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்தல் ஆகியவை தொழிலாக இருந்துள்ளன.

படையாட்சி, அண்ணாவி (இந்த தெலுங்கு சொல்லுக்கு "வாத்தியார்" என்று அர்த்தமாம்), புலவர் போன்றவை அங்கு சாமானிய வன்னியர்களின் பட்டபெயர்களாக இருக்கின்றன. 

மேலும் சவளக்காரன்  என்றும் குறிப்பிடபடுகின்றனர். சவளம் என்பது வாள் போன்ற ஒரு ஆயுதம் என்றும் அதனை கொண்டு போரிட்டதால் தாங்கள் அந்த பெயரிலும் அழைக்கப்பட்டதாக தென் பகுதி வன்னியர்கள் கூறுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஊருக்கு ஓரிரண்டு வன்னியர் குடும்பங்களாவது வாழ்ந்து வருகின்றனர். கடையநல்லூர் புளியங்குடி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் ஊருக்கு 100  குடும்பங்களுக்கு மேல் வன்னியர்கள வாழ்கின்றனர்.

குற்றாலத்தில் வன்னியருக்கு பாத்தியப்பட்ட மடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது ...
 தமிழக அமைச்சராக இருந்த திரு. எஸ். எஸ். ராமசாமி படையட்சியாரின் பெயர் சொல்லும் கல்வெட்டு நெல்லை மாவட்டம் இடைகாலில் காணப்படுகிறது  

நெல்லை குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திசையன்விளை என்ற ஊரில் கூட 50 க்கும் மேற்பட்ட வன்னிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தென் பகுதி வன்னியர்களில் குமரி மாவட்ட வன்னியர்கள் நிலை வித்தியாசமானது .

1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநில பிரிவினையின் போது கேரள மாநிலத்தில் இருந்த நாகர் கோவில் , செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன. அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக வன்னியர் சமுதாய விடிவெள்ளிகளில் ஒருவரான திரு. அம்பாசங்கர் IAS அவர்கள் பொறுப்பேற்றார்.      
                    
 சமூக பற்று மிக்க அம்மேதை, தன் குல மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினார். கோட்டாறு, வடசேரி உள்ளிட்ட தற்போதைய குமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் வன்னியர்கள் வசிப்பதையும், தங்கள் பூர்வ பெருமை அறியாது உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததையும் அறிந்தார்.

அவ்வன்னியர் வீடுகளில் இருந்துதான் அம்பா சங்கர் அவர்களுக்கு உணவு கொண்டு செல்லப்படும்.  நம் மக்களிடம், உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அவர் இதனை செய்திருக்கவேண்டும்.

நம் மக்களை அரவணைத்தாலும் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் அம்பா சங்கர் அவர்களுக்கு சிக்கல் ஏற்ப்பட்டது. நாகர் கோவில், செங்கோட்டை தாலுக்காக்களில் வன்னியர்களுக்கு சாதி சான்று வழங்குவதில் ஆவண ரீதியிலான முட்டுகட்டைகள் இருந்திருகின்றன.

எனவே, நம் மக்கள் உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு "இந்து- பரதர்" என்று சாதி சான்று வழங்க வழி செய்தார்.

நாகர்கோவில் வடசேரியில் சுகம் மருத்துவமனை நடத்தி வரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் திரு. முத்துராமலிங்கம் அவர்களின் தந்தையார் இவர்.
  

ஆனால் இன்னொரு பின்னடைவு அவர்களுக்கு ஏற்ப்பட்டது. அவர்கள் வன்னியர்களே என்றாலும் சாதி சான்றிதழ் வேறாக இருப்பதால் வடமாவட்டங்களை சேர்ந்த வன்னியர்கள் பெண் கொடுக்கவோ எடுக்கவோ தயங்குகின்றனர்.

ஆனாலும் தாங்கள் வன்னியர்கள் என்பதை விளக்கி, தங்கள் நிலையை புரியவைத்து அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வன்னியர்களிடம் குமரி மாவட்ட வன்னியர்கள் சம்பந்தம் செய்து உள்ளனர்.

குமரி மாவட்ட வன்னியர்களுக்கு, வன்னியரின் குல பெருமையும் உறவும் வேண்டும். அதே சமயம் பரதர் சான்றிதழின் மூலம் கிடைக்கும் சலுகையும் வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான நிலை தான்.

விருதுநகர் மாவட்டத்திலும் வன்னியர்கள் கணிசமாக வாழ்ந்துவருகின்றனர். வன்னியர்களுக்கு பாத்தியப்பட்ட பல கோவில்களையும் இங்கு காணலாம். ராஜபாளையத்தில் வன்னியர்களிடம் இருந்த திரௌபதி அம்மன் கோவில் எப்படியோ தெலுங்கு ராஜுக்கள் வசம் சென்று விட்டது.

ராஜபாளையத்துக்கு அருகில் தான் வன்னியர்களின் பெருமையை பறைசாற்றும் சிவகிரி அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் தற்போது நீதி மன்றம் உள்ளிட்ட அரசு அலுவகங்கள் செயல்பட்டு வருகின்றன.     

சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த வீரபாண்டியன், ராஜபாளையத்தில் வணிகம் செய்து வருகிறார். அவரது வழிகாட்டலுடன் சிவகிரிக்கு சென்றோம். அரச பரம்பரையை சேர்ந்த சிலர் தேனீர் கடை நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து அளவளாவினோம்.

வன்னியகுல க்ஷத்ரியர்களான சிவகிரி அரச வம்சத்தாருடன் நான். 

சிவகிரி அரச வம்சத்தாருடன் புளியங்குடியை சேர்ந்த திரு. லக்ஷ்மணன் படையாட்சியார் அவர்கள் 


சிவகிரி அரச வம்சத்தாருடன் தென்காசியை சேர்ந்த திரு. வேல்முருகன் படையாட்சியார் அவர்கள்  

சிவகிரி அரச வம்சத்தாருடன் திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்கள் 


அப்போது இலை வாணியர் அல்லது சேனை தலைவர் என்று சொல்லப்படும் சமூகத்தை சேர்ந்த திரு. நல்லசிவம் அவர்கள் எதிரில் வந்தார். சிவகிரி வம்சம் மறவர் சமுதாயம் என்று பொய் பிரச்சாரம் செய்து வருபவர் இவர் தான். அவரோடு பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது. அப்போது எதிரிலேயே இருந்த சிவகிரி அரச வம்சத்து வாரிசுகள் தங்களை வன்னியர் என்று கூறினாலும், இல்லை இல்லை நீங்கள் மறவர் தான் என்றார் நல்லசிவம். அவருக்கு சிவகிரி வரலாற்றை நாம் விளக்கினோம்.

அதாவது வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை "வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012  அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012  ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட "வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.

சிவகிரி ஜமீன்தார் அனுப்பிய திருமண அழைப்பிதழ்
தற்போதைய சிவகிரி ஜமீன்தார் வன்னியகுல க்ஷத்ரியரான தெய்வ திரு. வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் அவர்களின் புதல்வன் என்ற செய்தி திருமண அழைப்பிதழின் உள்ளே இடம்பெற்றுருக்கிறது.

 

சிவகிரி அரசர்கள் "வன்னியகுல க்ஷத்ரியர்கள்" என்று கூறும் அவர்களது சொத்து பத்திரம்.
 
1925  ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார். இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை உறவினர்கள் சிவகிரி ஜமீனாக நியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.

சிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார்.

அரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன் சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும் திருமதி. பால குமாரி நாச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள் அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர் பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர். இந்த செய்திகளை எல்லாம் நல்லசிவத்திடம் காரசாரமாக விவாதித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டாலும் நீண்ட நேரத்திற்கு மனம் அமைதி அடையவில்லை.

இதை போலவே, தென் மாவட்ட வன்னிய அரசர்கள் பற்றி விளக்கமாக எழுதவேண்டும். அதை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம். 

திண்டுக்கல் மாவட்ட வன்னியர்களின் கதையோ வேறு. பெயர் தான் தென் மாவட்டமே தவிர வட மாவட்டங்களை போலவே வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி திண்டுக்கல்.

திண்டுக்கல், நத்தம் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை வன்னியர்களே நிர்ணயிக்கின்றனர். ஆனால் வன்னியர்கள், இந்து வன்னியர் - கிருஸ்தவ வன்னியர் என்று பிரிந்து கிடக்கின்றனர்.




2011  ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பா ம க சார்பில் வன்னிய கிறிஸ்தவரான பால் பாஸ்கர் போட்டியிட்டார். இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர். இந்தியாவின் புகழ் பெற்ற தொண்டு நிறுவனம் இவருடையது. பசுமை வானொலி என்ற பெயரில் பண்பலை வானொலியும் நடத்தி வருகிறார். கல்லூரி அதிபருமான இவருக்கு அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் நல்ல செல்வாக்கு. ஆனாலும் தோற்று போனார். காரணத்தை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்.

திண்டுக்கல் வன்னிய கிறிஸ்தவரான பேராசிரியர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள் எழுதிய நூல்.  

மேலே காணும் புத்தகத்தின் 59  ஆம் பக்கத்தில்...

இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பாலபாரதி
கன்னடக்காரர்.

எல்லா ஊரிலும் கம்யூனிஸ்ட் கட்சி மதத்துக்கு எதிரானது ஆனால் திண்டுக்கல் தேர்தலில் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் ரகசிய கூட்டணி சேர்ந்து கிருஸ்தவரான பால் பாஸ்கர் ஜெயிக்க கூடாது என்று பிரச்சாரம் செய்து ஓட்டை பிரித்து கோட்டைக்குள் இறங்கினார் பாலபாரதி.

தமிழனும் தோற்றான். வன்னியனும் தோற்றான்.        
                   
திண்டுக்கல்லில் மறக்கமுடியாத இன்னொரு மாமனிதர் வன்னிய கிறிஸ்தவரான அருட்தந்தை பாத்திமா நாதன். தவசிமேடை என்ற ஊரில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார். 70  வயதை கடந்த முதியவர். நாம் நேரில் சென்று பார்த்தபோது. ரத்த பாசத்தால் புளகாங்கிதம் அடைந்தார். நம்மை ஆசிர்வதித்தார்.

நாம் பார்த்ததில் தென் மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்த சில வன்னியர்கள் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்று கின்றனர். குறிப்பாக நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய காளியப்பன் குறிப்பிடதக்கவர். கடந்த 2010 ஆம் ஆண்டு அவரை அரசு விழா ஒன்றில் தி மு க சட்டமன்ற உறுப்பினரான மறவர் சமூகத்தை சேர்ந்த மாலைராஜா மேடையில் வைத்தே தாக்கினார். அப்போதைய
தி மு க அரசு இதை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை. ஒட்டுமொத்த வன்னியர்களும் இதை ஒரு சம்பவமாகவே எடுத்து கொள்ளாத அவமானமும் அரங்கேறியது.

தென் மாவட்டங்களில் விரல் விட்டு என்ன கூடிய அளவிலேயே வன்னியர்கள் வாழ்க்கை தரத்தில் உயர்ந்து உள்ளனர். பெரும்பான்மை வன்னியர்களின் நிலை போதிய உயரத்தில் இல்லை.

மொத்தத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வன்னியர்கள் அடியோடு இல்லை என்பதெல்லாம் பச்சை பொய்.

வட மாவட்டங்களில் வசிக்கும் முக்குலத்தோரை விட தென் மாவட்டங்களில் அதிக அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே மெய்.

   -நன்றி-        

இப்பயணத்துக்கு உற்ற துணையாய் இருந்த திரு. ஸ்ரீ விஜய் கண்டர், தவத்திரு. அன்னை சகுந்தலா அம்மையார்,  திரு. வேல்முருகன், திரு. இசக்கியப்பன், திரு. ஆறுமுக நயினார், திரு. அரிகரன், திரு. வி. எம். முருகன் , திரு. சாமித்துரை, திரு. சுரேஷ், திரு. செண்பகராஜ், 
திரு. வீரபாண்டியன் (ராஜபாளையம்), திரு. குருநாதன் (திசையன் விளை), டாக்டர். முத்துராமலிங்கம் (கன்னியாகுமரி), வழக்கறி ஞர் திரு. நவநீத கண்ணன்( மதுரை ), திரு. சண்முக சுந்தரத்தின் மாமனார் (திண்டுக்கல்),   திரு. மைகேல் டேவிட் (திண்டுக்கல்) மற்றும் இந்த வலைப்பூவை உருவாக்கி தட்டச்சும் செய்த திரு. அ.கார்த்திக் நாயகர் உள்ளிட்ட அனைவருக்கும்...