நாற்படை கொண்டு பல நாடுகள் ஆண்ட பன்னாட்டார் வம்சமே.
..
அக்னியில் உதித்த மற்றொரு வீர வன்னிய மகராசனே.
..
வாழ்வாங்கு வாழ்ந்து பின் சூழ்ச்சியில் வீழ்ந்த சமுதாயத்தை
விடியலை நோக்கி மீண்டும் படையெடுக்க செய்த எங்கள் படை தலைவரே
..
தனி ஒரு மனிதனின் கோபம் ஒரு சமூகத்தை முன்னேற்றும் என்பதை காந்தி, மண்டேலா, தந்தை பெரியார் வழியில்
உலகிற்கு உணர்த்திய எங்கள் பெருந்தலைவரே..
..
எவருக்கும் அடங்காத முரட்டு கூட்டத்தை தன் விரல் அசைவில் இயக்கும் எங்கள் அன்பு ஆசானே.
..
திண்டிவனம் தந்த திருவிளக்கே
சஞ்சீவராய கவுண்டர் - நவநீதம் ஆயாளின் அருந்தவ புதல்வரே.
..
தமிழை வளர்க பொங்கு தமிழ் கண்ட எங்கள் பொக்கிஷமே.
..
உரிமை போரை உலகமே வியக்க நடத்தி காட்டிய எங்கள் போர் மன்னனே.
..
சமூக நீதி காக்க நுழைவு தேர்வை ரத்து செய்த சமூக நீதி போராளியே.
..
மக்கள் நல்வாழ்வுக்கு இந்திய முழுவதும் 108 அவசர ஊர்தி கொண்டுவந்த மக்கள் காவலரே.
..
ஒரே நாளில் அரியலூரில் ஏழு அம்பேத்கர் சிலை திறந்த சமூக நல்லிணக்க போராளியே.
...
கோவையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக போட்ட தடா சட்டத்தை எதிர்த்து போராடி
சோதனை சாவடிகளை அகற்ற கூறி சிறை சென்ற சிறுபான்மை காவலரே
..
பிற்படுத்த மக்களுக்காக மத்தியில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்று தந்த இட ஒதுக்கீட்டு நாயகரே.
..
கோடிக்கணக்கில் மரங்களை நட்டு பசுமை படைத்த பசுமை படைப்பாளியே.
..
என்றென்றும் தாங்கள் பாட்டாளியே.
...
ஏழைகளின் குரலாய் ஒலிக்கும் எங்கள் தெய்வ திருமகனே.
...
எம் பி சி யில் 108 சாதிக்கு இட ஒதுக்கீட்டை பெற்று தந்த நீதி காத்தவரே.
..
தங்களின் இந்த இனிய பிறந்தநாள் தமிழினத்தின் பொன்னாள்.
தாங்கள் சீரும் சிறப்போடும் நலத்தோடும் வளத்தோடும் பல்லாண்டு வாழ்ந்து தமிழின போராளியாய், தமிழ் குடி தாங்கியாய் தமிழ் நாட்டை காக்கவேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறேன் அய்யா.
என்றென்றும் உங்கள் வழியில் நாங்கள்.