Saturday 30 April 2011

வன்னியர் வரலாறு பாகம் -2

Vanniyar History Part 2

வன்னியர் வரலாறு பாகம் -1

Vanniyar History Part 1

வன்னியர் புராணம்




தமிழ்நாட்டில் வேறு எந்த சமுதாயத்துக்கும் இல்லாத பெருமையாக, வன்னியர் சமுதாயத்துக்கு என்று தனி புராணம் உண்டு. இந்து மதத்தின் பல்வேறு புராணங்களில் இதுவும் ஒன்று.

சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன்.

சிம்மவர்மன் என்ற இரண்யவர்மன், ஆதித்ய சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய சோழ மன்னர்களால் தான் நடராஜர் கோயில் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது என்பதற்கும்; சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில்தான், (98 ஆண்டுகளுக்கு முன்பு வரை) நடராஜர் கோயில் இருந்து வந்ததற்கும்; தீட்சிதர்கள் சூழ்ச்சி செய்து, சிதம்பரநாத சூரப்ப சோழகனாரின் பாட்டனார் தில்லைக்கண்ணு சூரப்ப சோழகனாரிடமிருந்து கோவிலைப் பறித்துக் கொண்டனர் என்பதற்கும் பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5493:2009-03-17-13-20-57&catid=278:2009&Itemid=27

Friday 29 April 2011

"க்ஷத்ரியன்" நூல்

"வன்னியர்குல குரு" "தேசியக் கவி" "ராஜரிஷி" திரு.சு.அர்த்தநாரீச வர்மா அவர்களின் இதழ் தொகுப்பு.






வன்னியக்குல க்ஷத்ரியர்களுக்குரிய பட்ட பெயர்களில் சில :

தகவலை வழங்கிய சொந்தம் : திரு.சுவாமி அவர்கள்

வன்னியக்குல க்ஷத்ரியர்களுக்குரிய பட்ட பெயர்களில் சில :

1.அதியமான் 2.ஆறுமறையார் 3.அன்பனார். 4.அண்னலங்காரர் 5.ஆண்டுகொண்டார் 6.அஞ்சாத சிங்கம் 7.பள்ளி 8.படையாண்டவர் 9.துரைகள் 10.ஜெயப்புலியார் 11.புலிக்குத்தியார் 12.முனையரையர் 13.முத்தரையர் 14.மானங்காத்தார் 15.வாணத்தரையர் 16.தேவர் 17.தொண்டைமான் 18.தொண்டாம்புரியார் 19.ஞானியார் 20.ஒய்மான் 21.சேத்தியார் 22.வாண்டையார் 23.முதன்மையார் (முதலியார்)24.நன்மையார் 25.வணங்காமுடியார் 26.நாயகர்(நாயக்கர்) 27.காலாட்கள் தோழ உடையார் 28.சற்றுக்குடாதான் 29.ரெட்டியார் 30.கவுண்டர் 31.கண்டர் 32.வீரமிண்டர் 33.வன்னியனார் 34.ரெட்டைக்குடையார் 35.சேரனார் 36.சோழனார்(சோழங்கனார்) 37.சோழகங்கர் 38.வல்லவர் 39.அரசுப்பள்ளி 40.பாண்டியனார் 41.பரமேஸ்வர வன்னியனார் 42.நயினார் 43.நாட்டார்(நாட்டாமைக்காரர்) 44.பல்லவராயர் 45.காடவராயர் 46.கச்சிராயர் 47.சம்புவராயர் 48.காளிங்கராயர் 49.சேதுராயர் 50.தஞ்சிராயர் 51.வடுகநாதர் 52.பாளையத்தார்(பாளையக்காரர்) 53.சுவாமி 54.செம்பியன் 55.உடையார் 56.நரங்கிய தேவர் 57.கண்டியதேவர் 58.சாமர்த்தியர் 59.சாளுக்கியர் 60.சாமந்தர் 61.பல்லவர் 62.பண்டாரத்தார் 63.தந்திரியார் 64.ராஜாளியார் 65.கங்கண உடையார் 66.மழவராயர் 67.மழவர் 68.பொறையர்(புரையர்) 69.பூபதி 70.பூமிக்குடையார் 71.ராயர் 72.வர்மா 73.படையாட்சி 74.காசிராயர் 75.ராய ராவுத்த மிண்டார் 76.மூப்பனார் 77.வள்ளை(வள்ளல் என்பதன் மரூஉ) 78.பின்னடையார் 79.சேனைக்கஞ்சார் 80.பரிக்குட்டியார் 81.சேர்வை 82.கொங்குராயர் 83.கட்டிய நயினார். 84.கிடாரங்கார்த்தவர் 85.சமுட்டியர் 86.ஷத்திரியக்கொண்டார் 87.மருங்குப்பிரியர் 88.பண்ணாட்டார் 89.கருப்புடையார் 90.நீலாங்கரையார் 91.கடந்தையார் 92.வில்லவர் 93.கொம்பாடியார் 94.தென்னவராயர் 95.வண்ணமுடையார். 96.செட்டிராயர்(செட்டியார்),97.மேஸ்திரி, 98.வேளிர், 99.தேசிகர், 100.நரசிங்கதேவர்,101.காடுவெட்டியார்,102.உருத்திரனார்,103.,வானதிராயர்,
104.செங்கழுநீரர்,105.ஆணைகட்டின பல்லவராயர் 106.கரிகால் சோழனார்,107.கங்கரையர், 108.வெற்றிக்களித்த வீரமிண்டார் 109.களவென்றுடையார்,110.படையெழுச்சியார்,111.களத்தில் வென்றார் 112.தொண்டையர்(தொண்டலார்)113.நாயக வர்மா 114.பிடாரியார்..இன்னும் பல நூறு பட்ட பெயர்கள் உண்டு…

குறிப்பு : இந்த பட்டப்பெயர்கள் அனைத்தும் கல்வெட்டு ஆதாரங்கள் அடிப்படையில் வன்னியர்களுக்கு உரியது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.

தென் தமிழகத்தில் வன்னியர்

தென் தமிழகத்தில் வன்னியர்

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. சுவாமி அவர்கள்

தென் தமிழகத்தில் வன்னியர் உண்டு.அவர்களுக்கும் வரலாற்று சிறப்புக்கள் உண்டு.பாண்டிய நாட்டுப் பகுதிகளில் ஆட்சியாளர்களாய் இருந்துள்ளனர். இந்த வன்னிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர்கள் பாண்டிய மன்னனின் ஆசனத்துக்கு சரி சமமான ஆசனத்தில் அமரும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள்.

இந்த ஆட்சியாளர்களே பிற்காலத்தில் ஏழாயிரம் பண்ணை,சிவகிரி,அளகாபுரி பாளையக்காரர்களாக விளங்கியவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வில்லிபுத்தூர் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட சிவகிரி பாண்டியர் வன்னியரே.

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த சமுசிகாபுரம் ஓர் ஜமீனாக விளங்கியது.இதனை ஆண்ட ஜமீந்தார்களுள் சிறந்தவராகக் கருதப்படுபவர் திரு.கருப்ப வன்னியனார் ஆவார்.

இவரது தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் ஆவார்.இந்த ஜமீனின் முதல் ஆட்சியாளர் இவர்தான்.

கருப்ப வன்னியனார் தமது ஜம்மின் மக்களுக்காக பல நற்பணிகளைச் செய்துள்ளார்.

"ஏழு குளம் ஆண்ட எஜமான்" என்று மக்களால் அழைக்கப்பெற்றவர். இன்றும் இவர் வழி வந்தோரை அவ்வூர்(சமுசிகாபுரம்) மக்கள் "எஜமான்" என்றும் "சாமி" என்றும் "மகராஜா" என்றும் "பாண்டியன்" என்றும் அழைக்கின்றனர்.

பெரிய கருப்ப வன்னியனாருக்கு "மாப்பிள்ளைத்துரை" என்ற பட்டமும் உண்டு.இவர் தமது தந்தை,தாய் பெயரில் இரண்டு ஊர்களை உருவாக்கினார்."சங்கரபாண்டியபுரம்", "கோதை நாச்சியார்புரம்" என்ற இரண்டு ஊர்களும் இன்றும் உள்ளன. கருப்ப வன்னியனாரின் தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் பெயரையும், அவர் தாயார் திருமதி.கோதை நாச்சியார் பெயரையும் அவ்வூர்கள் தாங்கி நிற்கின்றன.

வரலாறு சொல்லும் நாம் யார் என்பதை.நமக்கு விளம்பரங்கள் தேவையில்லை.

தென் தமிழ் நாட்டில் வன்னியர் இல்லை என சில வேற்று ஜாதியினர் கூறுவது அவர்கள் அறியாமையையே காட்டுகிறது.

பாண்டிய வன்னியர்

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. சுவாமி அவர்கள்

பாண்டிய நாட்டில் வன்னியர் குல மக்கள் இல்லை என்ற கருத்து தவறு. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் சிற்றரசராக "பள்ளிதரையன்" என்பவன் கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளான்.இக் கல்வெட்டு மதுரை மாவட்டம் கருங்காலக்குடிக்கு அருகிலுள்ள பஞ்சபாண்டவர்குட்டு எனும் மலையில் உள்ள ஒரு குகையில் பொறிக்கப்பட்டுள்ளது.இது வட்டெழுத்தில் காணப் பெறுகிறது ஆனால் மொழி தமிழாகும். (ARE Report for the year 1912, part 2, Para 1, p.50))

மேலும் பாண்டிய மன்னர்களின் அமைச்சராக விளங்கிய வன்னிய குலத்தவர் பின்னாளில் பாளையக்காரர்களாய் அறியப்பட்டவர்கள்.சிவகிரி,அளகாபுரி,ஏழாயிரம் பண்ணை பாளையத் தலைவர்கள் இம்மரபினர் ஆவர்.இவர்கள் வன்னிய குலத்தவர் ஆவர்.

திருநெல்வேலி கெஜட்டியரில் சிவகிரி பாளையத்தார் மதுரைப் பாண்டியர் வழி வந்தவர்கள் என்ற குறிப்பு உள்ளது.

கி.பி.1754 ஆம் ஆண்டில் வரகுணராம சங்கர பாண்டிய வன்னியர் என்ற சிவகிரி பாளையக்காரர் சிவகிரியைச் சார்ந்த ராசசிங்கப் பேரேரி,குளம்,கால்வாய்,புன்செய் நிலங்களுக்கான குளம், உப்பளம் முதலியவற்றை ஏற்படுத்தித் தந்ததைக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது.இவர் பாண்டியர் பட்டம் பெற்றவர்.இந்தக் கல்வெட்டின் காலம் கி,பி.1754.

இன்னொரு செய்தி என்னவென்றால் மேற்குறிப்பிட்ட பாளையக்காரருக்கு முன்னால் ஆட்சி செய்தவர்
வரகுணராமேந்திர பாண்டிய வன்னியனார் என்பவர் ஆவார்.அப்படியென்றால் இந்தப் பாளையக்காரர் கிட்டத்தட்ட தென்காசிப் பாண்டியரின் இறுதி அரசரான வரகுணராம குலசேகர பாண்டியரின் சமகாலத்தவர் என்பது உறுதியாகிறது.

பாண்டியர்கள் ஆட்சி செய்தபோதே பாண்டியர் பட்டத்துடன் திகழ்ந்தவர்கள் சிவகிரி பாளையக்காரர்கள்.எனவே பாண்டியர் பட்டம் இவர்களுக்கும் உரித்தானது என்பதை மறுக்க முடியாது.

" தொண்டைமான்" "பல்லவராயர்" வன்னியர்

பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு,பல்லவகுடியினர் பல்லவராயர்,சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.அவ்வாறாக வந்த ஒருவர்தான்,சோழமன்னன் குலோத்துங்கச் சோழன் படைத்தளபதியான பல்லவர் குடியிலிருந்து வந்த கருணாகரத்தொண்டைமான். தொண்டைமான் என்பவர் உண்மையில் பல்லவக்குடிகளே. பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் என்றுதான் அர்த்தம்.இளந்திரையன் 'தொண்டைமான்' என்ற பட்டத்தை தரித்திருந்தான்.
கருணாகரத் தொண்டைமானை "வன்னியர்" என்று சொல்கிறது கம்பரின் சிலையெழுபது நூல். கருணாகர தொண்டைமானின் குலம் வன்னியர் குலம் என்றும்.. சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் இந்த நூல் சொல்கிறது...

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html

கருணாகர தொண்டைமான் வாழ்ந்த காலத்தில் அவர்களின் முன்பு கவிசக்கரவர்த்தி கம்பர் அவர்களால் இயற்றப்பட்ட இந்த சிலையெழுபது நூலில் கருணாகர தொண்டைமான் வன்னிய குலத்தவர் என்பதையும் பல்லவ(தொண்டைமான்) மரபில் வந்தவர் என்றும் அவரின் கோத்திரம் வன்னியர்களின் கோத்திரமான சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வழிவந்தவரே பிற்காலத்தில் திருச்சியை சுற்றிய பகுதியில் பல்லவராயர்கள் என்ற பெயரில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவக்குடிகள். பிற்காலத்தில் பல்லவர்கள் அன்னியர்களால் வீழ்ச்சியுற்ற சமயத்தில்,அவர்கள் வன்னியரில் ஐக்கியமாயினர். இவர்களுக்கும் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சிசெய்த பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.

Tuesday 19 April 2011

சேர சோழ பாண்டிய பல்லவ வன்னியர்கள்


சம்புவராயர்கள்


Sambuvarayars were chieftains who belong to the Palli(Vanniyar)
caste.In Madhura Vijayam written by Gangamadevi its mentioned that the
Sambuvarayas were Vanniyars.The Sambuvarayars ruled mainly northern
districts. The first chieftain identified is Omainthan Munnutruvan
Palliyana karanamanikam.In this inscription this chieftain is mentioned
as a Palli.(South Indian Inscriptions Vol.7,Number 500).He is
considered to be the ancestor of the Sengeni Sambuvarayas.

He is identified during Sundara Chola's rule.After him the Sambuvarayas
started gaining power and soon attined the position of feudatory rulers.

LIST OF SAMBUVARAYA RULERS AND THEIR PERIOD:

During the reign of Sundara Chola 1.Omainthan Munnutruvan Palliyana
Karanamanickam

2.In the later half of 11the century AD during the reign of Adhirajendra
(son of Rajendra chola 1) the Sambuvarayas were identified as rulers of
Sengeni nadu.
Through an inscription found during the rule of Adhirajendra Chola
(1068AD) we know about "Sengeni Saathan Nalaayiravan aka Karikala Chola
Sengeni Nadalvan.Another one inscription mentioning this Sambuvaraya is
found in Kidangal near Tindivanam.

3.Oymanatu Munnutru Palli Sengeni Nalayiravan Ammayappan aka Rajendra
Chola Sambuvaraya: He is mentioned in about 10 inscriptions.These
inscriptions belong to the periods of Vikrama Cholan,Kulothunga Chola 2,
Rajarajan 2 and Rajathirajan 2 and were written between 1123AD to1174AD.

4.Sengeni Ammayappan Siyan Pallavandan aka Rajanarayana Sambuvaraya:
His inscriptions were found from Vikrama Chola rule to Rajathiraja 2.

5.Sengeni Mindan Siyan Ammayappan aka Ethirili Chola Sambuvarayan:He is
identified during the reign of Rajathiraja 2nd.He is also know
as "Sengeni Ammayappan Vanniya Nayan Sambuvarayan"

6.Ammayappan Pandinadu Kondan aka Kandar suriyan
Sambuvarayan:Identified during the reign of Kullothunga Chola 3.

7.Sengeni Athiyandan aka Vikrama Chola Sambuvarayan:Mentioned as a
feudatory of Rajathiraja 2.

8.Sengeni Viracholan athimallan aka Kulothunga Chola Sambuvarayan:
He is also identified during Kulothunga Chola 3 period.

9.Sengeni Ammayappan Azhagiya cholan aka ethrili chola Sambuvarayan:
He was a feudatory ruler during the period of Kulothunga Chola 3,Raja
Raja 3 and also during the period of Viajaya Ganda Gopala.

10.Veeraperumal Ethrili Chola Alapiranda Nayan Aka Rajaraja
Sambuvarayan:He is identified as a feudatory under Vijaya Ganda Gopala

Sambuvarayas belong to a Palli family called Sengeni and they branched
and ruled sveral areas of Tondaimandalam as chieftains.Sometimes we find
2 to 3 cheiftains ruling different regions in the same period.

These 10 Sambuvarayas ruled different portions of Tondaimandalam till
the decline of the Chola rule.

Sunday 17 April 2011

சோழர் வன்னியக்குலத்தவர் என்பதற்க்கு நடைமுறை ஆதாரம்

இது கதையோ...கற்பனையோ அல்ல.... நடைமுறை ஆதாரம். சோழ மன்னர்கள் வன்னிய வம்சத்தவர் என்பதற்க்கு இதுவே சிறந்த சான்று. தங்களை சோழர் வழிவந்தோர் என்று யார் வேண்டும் என்றாலும் கூறி கொள்ளலாம். ஆனால் நடைமுறை ஆதாரம் வேண்டும். உண்மையான சோழர் குல வாரிசுகள் உயிரோடு இருக்க...மாற்று குலத்தார் தங்களை சோழர் என்று அழைத்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.



சோழர்களின் குல தெய்வமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோழ மண்டக படி உற்சவத்தை நடத்தும் உரிமையை பெற்றவர்கள் வன்னியக்குலத்தவரான பிச்சாவரம் சோழனார் மட்டுமே. வேறு எந்த சாதியினருக்கும் இந்த உரிமை இல்லை.


சோழர்கள் மட்டுமே முடி சூட்டப்படும் சோழர்களின் குல தெய்வமான தில்லை நடராஜர் ஆலயத்தில் தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர். அவ்வாறு பிச்சாவரம் மன்னர் மஹாராஜா ராஜா ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்அவர்கள் சோழராக முடி சூட்டப்பட்டு.. புலி கொடி கொடுத்து சோழராக பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தில்லை அந்தணர்களுடணும் பொது மக்களுடணும் காட்சி தரும் அரிய புகைப்படம்.



மஹாராஜா ராஜா ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்



மஹாராஜா ராஜா ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார்


சோழர்(வன்னியர்) :
=================

இந்த தகவலை வழங்கிய சொந்தங்கள் : திரு.ஆறு.அண்ணல் மற்றும் திரு.சுவாமி அவர்கள்.

பெரிய புராணத்தில் உள்ள கூற்றுவ நாயனார் புராணம்: கூற்றுவ நாயனார் புராணத்தில் பாடல்கள் 3,4,5 இவற்றை கவனிக்கவும்.


பாடல் 3:

வென்றி வினையின் மீக்கூர
வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச்
செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம்
வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு
வெல்லாம் உடைய ராயினார்.

கருத்து: வெற்றி பெறும் செயல் மேன்மேல் பெருக, தும்பைப் பூவைச் சூடி, மன்னருடன் செய்யும் போர்கள் பலவற்றையும் கண்டு அப்போர்த் தொழிலின் நிறைவாக வெற்றி அடையும் வகையில் வாகை மாலையோடு பொருந்திய மணமுடைய மலர் மாலைகளையும் சூடி, அவ்வேந்தர்களின் வளநாடுகளை எல்லாம் கையகப்படுத்தி, மன்னர்க்குரிய முடி ஒன்று தவிர, மற்ற செல்வங்கள் எல்லாவற்றையும் அவர் உடையவர் ஆனார்.

பாடல் 4:

மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்.

கருத்து: செழுமையான இவ்வுலகத்தைக் காக்கின்றவராய், நவமணிகளையுடைய பெரிய முடியைச் சூட்டுவதற்காகத் தில்லை வாழ் அந்தணர்களை வேண்ட, அவர்கள் சோழர்களின் தொன்று தொட்டு வரும் குல முதல்வருக்கு அல்லாமல் மற்றவர்க்கு முடி சூட்ட மாட்டோம் என்று கூறி, சேர மன்னரின் மலை நாட்டை அடைவாராய்,

பாடல் 5:

ஒருமை யுரிமைத் தில்லைவாழந்
தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி
காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து
மன்று ளாடுங் கழல்பணிவார்.

கருத்து:

கூத்தப்பெருமானிடத்து ஒரு நெறிய மனங் கொண்ட தில்லைவாழ் அந்தணர்கள், பெருமை கொண்ட அம் மணிமுடியைத் தங்களுக்குள் ஒரு குடியினர்பால் அருமையாய்க் காவல் செய்யும்படி வைத்து, இரு மரபும் தூயவரான அவர்கள், சேர நாட்டை அடைந்த பின்பு, கூற்றுவனார் தமக்குற்ற ஐயப்பாட்டினால் உள்ளம் தளர்ந்து, தில்லையம்பலத்தில் ஆடும் இறைவரின் திருவடியைப் பணிவாராய்,

---------- ---------- --------

களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.
இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.

பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர்.

Friday 15 April 2011

வன்னியர் தளம்

Vanniar thalam, this is the place where you can find the history of Vanniyakula Kshatriyas.