Friday 29 April 2011

பாண்டிய வன்னியர்

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. சுவாமி அவர்கள்

பாண்டிய நாட்டில் வன்னியர் குல மக்கள் இல்லை என்ற கருத்து தவறு. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் சிற்றரசராக "பள்ளிதரையன்" என்பவன் கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளான்.இக் கல்வெட்டு மதுரை மாவட்டம் கருங்காலக்குடிக்கு அருகிலுள்ள பஞ்சபாண்டவர்குட்டு எனும் மலையில் உள்ள ஒரு குகையில் பொறிக்கப்பட்டுள்ளது.இது வட்டெழுத்தில் காணப் பெறுகிறது ஆனால் மொழி தமிழாகும். (ARE Report for the year 1912, part 2, Para 1, p.50))

மேலும் பாண்டிய மன்னர்களின் அமைச்சராக விளங்கிய வன்னிய குலத்தவர் பின்னாளில் பாளையக்காரர்களாய் அறியப்பட்டவர்கள்.சிவகிரி,அளகாபுரி,ஏழாயிரம் பண்ணை பாளையத் தலைவர்கள் இம்மரபினர் ஆவர்.இவர்கள் வன்னிய குலத்தவர் ஆவர்.

திருநெல்வேலி கெஜட்டியரில் சிவகிரி பாளையத்தார் மதுரைப் பாண்டியர் வழி வந்தவர்கள் என்ற குறிப்பு உள்ளது.

கி.பி.1754 ஆம் ஆண்டில் வரகுணராம சங்கர பாண்டிய வன்னியர் என்ற சிவகிரி பாளையக்காரர் சிவகிரியைச் சார்ந்த ராசசிங்கப் பேரேரி,குளம்,கால்வாய்,புன்செய் நிலங்களுக்கான குளம், உப்பளம் முதலியவற்றை ஏற்படுத்தித் தந்ததைக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது.இவர் பாண்டியர் பட்டம் பெற்றவர்.இந்தக் கல்வெட்டின் காலம் கி,பி.1754.

இன்னொரு செய்தி என்னவென்றால் மேற்குறிப்பிட்ட பாளையக்காரருக்கு முன்னால் ஆட்சி செய்தவர்
வரகுணராமேந்திர பாண்டிய வன்னியனார் என்பவர் ஆவார்.அப்படியென்றால் இந்தப் பாளையக்காரர் கிட்டத்தட்ட தென்காசிப் பாண்டியரின் இறுதி அரசரான வரகுணராம குலசேகர பாண்டியரின் சமகாலத்தவர் என்பது உறுதியாகிறது.

பாண்டியர்கள் ஆட்சி செய்தபோதே பாண்டியர் பட்டத்துடன் திகழ்ந்தவர்கள் சிவகிரி பாளையக்காரர்கள்.எனவே பாண்டியர் பட்டம் இவர்களுக்கும் உரித்தானது என்பதை மறுக்க முடியாது.