Friday 29 April 2011

" தொண்டைமான்" "பல்லவராயர்" வன்னியர்

பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு,பல்லவகுடியினர் பல்லவராயர்,சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.அவ்வாறாக வந்த ஒருவர்தான்,சோழமன்னன் குலோத்துங்கச் சோழன் படைத்தளபதியான பல்லவர் குடியிலிருந்து வந்த கருணாகரத்தொண்டைமான். தொண்டைமான் என்பவர் உண்மையில் பல்லவக்குடிகளே. பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் என்றுதான் அர்த்தம்.இளந்திரையன் 'தொண்டைமான்' என்ற பட்டத்தை தரித்திருந்தான்.
கருணாகரத் தொண்டைமானை "வன்னியர்" என்று சொல்கிறது கம்பரின் சிலையெழுபது நூல். கருணாகர தொண்டைமானின் குலம் வன்னியர் குலம் என்றும்.. சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் இந்த நூல் சொல்கிறது...

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html

கருணாகர தொண்டைமான் வாழ்ந்த காலத்தில் அவர்களின் முன்பு கவிசக்கரவர்த்தி கம்பர் அவர்களால் இயற்றப்பட்ட இந்த சிலையெழுபது நூலில் கருணாகர தொண்டைமான் வன்னிய குலத்தவர் என்பதையும் பல்லவ(தொண்டைமான்) மரபில் வந்தவர் என்றும் அவரின் கோத்திரம் வன்னியர்களின் கோத்திரமான சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வழிவந்தவரே பிற்காலத்தில் திருச்சியை சுற்றிய பகுதியில் பல்லவராயர்கள் என்ற பெயரில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவக்குடிகள். பிற்காலத்தில் பல்லவர்கள் அன்னியர்களால் வீழ்ச்சியுற்ற சமயத்தில்,அவர்கள் வன்னியரில் ஐக்கியமாயினர். இவர்களுக்கும் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சிசெய்த பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.