Saturday 7 May 2011

வன்னிய மன்னன் கோப்பெருஞ்சிங்கன்

தகவலை வழங்கிய சொந்தம் : திரு.ராஜேஷ் பிள்ளை அவர்கள்

பல்லவர் குலத் தோன்றலான காடவர் கோன் எனப்படும் வன்னிய மன்னன்
கோப்பெருஞ்சிங்கன்
பிற்காலச்சோழர் ஆட்சிக் காலத்தில் முக்கிய பங்கு வகித்தார். தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள "சேந்தமங்கலம்" அவரது தலைநகராக விளங்கியது. சோழர்களின் கீழ் சிற்றரசனாக விளங்கிய காடவர்கோன் அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனது செல்வாக்கை அதிகரித்தார்.

பாண்டிய இளவரசன் சுந்தர பாண்டியனுடன் போர் தொடுத்தார். தெள்ளாறு என்ற
இடத்தில்
சோழ மன்னன் மூன்றாம் இராஜ ராஜனை வென்று சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார். கோபெருஞ்சிங்கனின் கல்வெட்டுக்கள் தொண்டை நாட்டிலுள்ள பல கோயில்களில் கிடைத்துள்ளன. தொண்டிநாட்டின் சில பகுதிகள் கோப்பெருஞ்சிங்கனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.

காடவர்
வன்னியர் என்பது கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.