Monday, 2 May 2011

வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள்...

தகவலை வழங்கிய சொந்தம் : திரு.ஆறு.அண்ணல் அவர்கள்

வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களே அங்கீகரித்து விட்டனர். அறிவிக்கையும் அமலில் உள்ளது. தமிழகத்தில் வன்னியர்களைத் தவிர வேறு யாருக்கும் ஷத்திரியப்பட்டம் சொந்தமில்லை.

இவற்றுக்கு ஆதாரங்கள் எண்ணற்றவை.

விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.

வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களுக்கு உள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்கு பொறுப்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாத முரட்டுக் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள். கிராமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.

மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.

பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் = சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.

இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.

சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.

இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.

அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.

நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையே இருக்கிறது.

வரலாற்று பதிவின் படி, சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் அனைவருமே வன்னியர்கள் தான்.