Friday, 6 May 2011

வன்னியகுல வாண்டையார்

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

வன்னியக்குலத்தவரின் பட்டங்களில் ஒன்றான "வாண்டையார்" பட்டம் பயன்படுத்துவோரில்
குறிப்பிடத்தக்கவர்கள் விளந்தை பகுதியை ஆட்சி செய்த வன்னியக்குல வாண்டையார்கள்.

விளந்தை கச்சிராயர்களின் ஆட்சி 18 ஆம் நூற்றாண்டளவில் முடிவுக்கு வந்தது.கி.பி 18ம் நூற்றாண்டிலிருந்து வாண்டையார் எனும் குடும்பப் பெயர் கொண்ட வன்னியர்களின் ஆட்சியின் கீழ் விளந்தை வந்தது.

இவர்கள் வன்னிய குலத்தவர் ஆவர்.இவர்களது ஆவணங்களில் இவர்கள் "வன்னிய ஜாதி, சிவமதம்,வாண்டையார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் உடையார்பாளையம் பாளையக்காரர்களின் உறவினராவர்.

விளந்தையில் அருள்மிகு ஸ்ரீ தர்மச்ம்வர்த்தனி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் குறிப்பிடத் தகுந்தது.இக்கோவில் கர்ப்ப கிருஹத்தின் திருச்சுற்றில் வடக்குப் பக்கத்தில் அலங்கார மண்டபம் ஒன்று உள்ளது.

இந்த அலங்கார மண்டபத்தின் இடப்பக்க இரண்டாம் தூணில் விளந்தையை ஆண்ட வாண்டையார் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.அம்மண்டபத்தின் மற்றொரு பகுதியில் விளந்தை வாண்டையார் ஒருவர் மற்றும் அவரது பட்டத்தரசி சிற்பங்கள் புடைச் சிற்பங்களாகக் காட்சி தருகிறது.

ஆட்சியாளர்களான இவ்வாண்டையார்கள் மேற்குறிப்பிட்ட கோயிலின்(அகச்தீசுரர்) திருக்கோவில்,சுற்றுப் பிரகாரம், கோபுரம் ஆகிய திருப்பணிகளைச் செய்திருக்கின்றனர். இதனை உறுதி செய்யும் கல்வெட்டு கோயிலின் நுழவாயில் கோபுரத்தின் இடப்பக்கச் சுவரில் உட்புறத்தில் உள்ளது.

இக்கல்வெட்டை நடுவன் அரசு கல்வெட்டு இயல் துறை படியெடுத்து தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 6 என்னும் நூலின் 432 ஆம் எண் கல்வெட்டாக வெளியிட்டிருக்கிறது.

வன்னியகுலத்தவரான இந்த வாண்டையார்கள், அவர்களது வாரிசுகள் பற்றிய குறிப்பும் உள்ளது.

1.காத்த பெருமாள் வாண்டையார்

அவரது மகன்கள் 2.பெரியசாமி வாண்டையார், இராமசாமி வாண்டையார்

3.பெரியசாமி வாண்டையார் மகன் கிருஷ்ணப்பா வாண்டையார்

என இவர்களது குலப் பட்டியல் தொடர்ச்சியாக அண்மைக்காலம் வரை உள்ளது.

தற்போது இப்பரம்பரையில் திரு.லோகநாத வாண்டையார் அவரது குமாரர்கள் திரு.சண்முகநாத வாண்டையார், திரு கமலநாதன் வாண்டையார் போன்றோர் வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது எளிய நிலையில் வாந்து வரும் இவர்கள் வள்ளல் குணம் கொண்டவர்கள்.

விளந்தையின் உள்ள சிவன் கோயில் இப்பகுதியில் முக்கியமானது.இக்கோயிலை எழுப்பியவ்ர்கள் இவ்வன்னிய மரபினரே.இக்கோயிலுக்கு 100 ஏக்கர் நில வருவாயைக் கொடையளித்துள்ளார்கள்.

தமது நிலயில் சரிவு ஏற்பட்டு,எளிய நிலைக்கு வந்த இவர்களால் இக்கோயிலை பராமரிக்க இயலாமல் போனது.இக்கோயில் நிர்வாகத்தை தற்பொழுது வேளாள இனத்தவர்கள் பெற்றுக்கொண்டு கோயிலை நிர்வகித்து வருகிறார்கள்.