Friday, 6 May 2011

வன்னியக்குல மாவீரன் பாயும் புலி பண்டாரக வன்னியர்

இலங்கையில் உள்ள வன்னியக்குல மாவீரன் பாயும் புலி பண்டாரக வன்னியரின் சிலை





பண்டாரக வன்னியன் வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன்.அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “”ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டாரக வன்னியன்.

வன்னிய மன்னர் வல்வில் ஓரி


வன்னியர்களே பல்லவர்,சேரர்,மழவர் என்பதை உறுதிப் படுத்தும் வன்னியர் வரலாறு முதல் தொகுதி.





கடையெழு வள்ளல்களில் ஒருவரான வன்னிய மன்னர் வல்வில் ஓரி அவர்களின் சிலை. வல்வில் ஓரி மழவர்களில் சிறந்த அரசன்.

மழவராயர்கள் வன்னியரே



வன்னிய மன்னர் ஸ்ரீமத் குமார விஜய ஒப்பில்லாத மழவராய நயினார்.



தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

வன்னியர் வரலாறு குறித்து ஏராளமான செய்திகள் இருந்தும் அதனை அறியாததால் நம்மவர்கள் கற்பனைக் கதைகளையும் ,வெறும் யூகங்களையும் நம்புகின்றனர். பொன்னியின் செல்வன் என்பது ஒரு நாவல்.இதன் ஆசிரியர் திரு.கல்கி அவர்கள் தமிழக வரலாற்று நூல்களை சிலவற்றைப் படித்துவிட்டு அதன் அடிப்படையில் பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதினார்.படிப்பதற்கு அது நன்றாக இருக்குமே தவிர அது வரலாற்றைக் கூறும் நூல் அன்று.

மழவராயர்,மானங்காத்த மழவராயர் போன்ற பட்டங்கள் வன்னியருக்குண்டு.எந்த வகையில் பார்த்தாலும் இப்பட்டம் நமக்கு சாலப்பொருந்தும்.

மழவராயர் = மழவர் +அரையர்

மழவர் தலைவர் என்பது இதன் பொருள். மழவர் என்பவர் யார்?
அவர்கள் ஒர் போர்க் குடியினர்.

மழவர் தாயகம் எது தெரியுமா? மழகொங்கம் எனப்பட்ட பகுதி.இது தருமபுரி,நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.

தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் மழவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரியை ஆண்ட அதியமான் மழவர் மரபினன்.

மழவர் அடிப்படையில் சேரர் தொடர்புடையவர்கள்.

சேரர் குலச் சின்னம் - வில்

மழவர் குலச் சின்னம் - வில்

வன்னியர் குலச்சின்னம் - வில்

வன்னியர் குல சின்னம் வில் என்பதும்,வன்னியர்களின் வில் சிறப்பு பற்றி கம்பர் எழுதிய வன்னிய மன்னன் கருணாகார தொண்டைமானை பற்றிய "சிலையெழுபது" என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். ருத்ர வன்னிய மஹாராஜா கையில் வாளோடும், வில்லோடும் பிறந்தவர் என்று வன்னியர் புராணம் சொல்வதும்
குறிப்பிடத்தக்கது.

மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள் பின்வருமாறு தம் நூல்களில் கூறியுள்ளனர்.

வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.

"தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னொரு செய்தி :அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர் அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.

சேரர் அக்னிகுலக்ஷத்ரியர் என்பதும் வன்னியர்கள் அக்னிகுலக்ஷத்ரியர் என்பதும். அரியலூர் ஜமீன்தாரான மழவராயர் வன்னிய குலத்தினர் என்பதும், மழவரும் சேரரும் வன்னியர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கங்கையாதிபதி

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

நாம் போர்க்குடியினர் என்பதை நினைவில்கொள்வோம். வன்னிய மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊர் இல்லை.அவரது மகன் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வடபகுதி மன்னர்களை வெற்றிகொண்டதன் நினைவாக உருவாக்கப்பட்டதுதான் கங்கைகொண்ட சோழபுரம்.அவரது படைகளில் இருந்தோர் வன்னியரே.

அதனால்தான் கங்கைகொண்ட சோழபுரத்தில் வன்னியர் மிகுதியாக உள்ளனர்.மேலும் அப்பகுதியில் உள்ள வன்னியர் தலைவர் ஒருவருக்கு "கங்கையாதிபதி" என்ற சிறப்புப் பட்டம் உண்டு.ராஜேந்திர சோழர் வடநாட்டு படையெடுப்பில் சோழர் தரப்பில் போர் புரிந்த வீர மரபினர் நாம் என்பது இந்த "கங்கையாதிபதி" என்ற பட்டப்பெயர் மூலம் தெளிவாகிறது.

வன்னியர் ஆட்சியில் விளந்தை

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் அருகே சுமார் 2 அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விளந்தை எனும் ஊர்.இவ்வூரை பிற்கால சோழர் ஆட்சியின் இறுதி தொடங்கி வன்னியர்கள் ஆண்டு வந்துள்ளனர்.இதனை கல்வெட்டாதாரங்கள் உறுதி செய்கின்றன.


விளந்தை கச்சிராயர்:


இவர்கள் வன்னிய குலத்தவர். கி.பி.16 ஆம் நூற்றாண்டளவில் விளந்தையை ஆட்சி செய்தவர்கள்.

வெட்டுங்கை அழகிய கச்சிராயர், சேவகப் பெருமாள் கச்சிராயர் போன்றோர் இம்மரபின் ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள்,குறிப்புகள் இவர்கள் ஆண்டதை உறுதி செய்கிறது.

கச்சிராயர் தலைவருள் ஒருவரான சேவக்ப் பெருமாள் கச்சிராயர் பற்றி கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் முன்மண்டப வாசல் பழுதுபட்டபோது அதனை திருத்தி அமைத்துள்ளார் சேவகப்பெருமாள் கச்சிராயர்.

கல்வெட்டு வாசகம்: "ஸ்வஸ்தி ஸ்ரீ இந்த விக்கிரம சோழன் திருவாசல் முறிந்து விழுகையில், பின்பு விளந்தையில் சேவகப் பெருமாள் கச்சிராயர் திருப்பணி இராகுத்த மிண்டன்"

இக்கச்சிராயர் வழி வந்தோர் இன்றும் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

விளந்தையில் கச்சிராயர்களின் ஆட்சி 17 ஆம் நூறாண்டின் இறுதிவரை நீடித்தது. கச்சிராயர்களுக்குப் பிறகு விளந்தை மற்றொரு வன்னியகுல தலைவரின் கீழ் வந்தது.இவர்கள் வாண்டையார் எனும் பட்டப்பெயர்கொண்டோர் ஆவர்.

வன்னியகுல வாண்டையார்

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

வன்னியக்குலத்தவரின் பட்டங்களில் ஒன்றான "வாண்டையார்" பட்டம் பயன்படுத்துவோரில்
குறிப்பிடத்தக்கவர்கள் விளந்தை பகுதியை ஆட்சி செய்த வன்னியக்குல வாண்டையார்கள்.

விளந்தை கச்சிராயர்களின் ஆட்சி 18 ஆம் நூற்றாண்டளவில் முடிவுக்கு வந்தது.கி.பி 18ம் நூற்றாண்டிலிருந்து வாண்டையார் எனும் குடும்பப் பெயர் கொண்ட வன்னியர்களின் ஆட்சியின் கீழ் விளந்தை வந்தது.

இவர்கள் வன்னிய குலத்தவர் ஆவர்.இவர்களது ஆவணங்களில் இவர்கள் "வன்னிய ஜாதி, சிவமதம்,வாண்டையார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் உடையார்பாளையம் பாளையக்காரர்களின் உறவினராவர்.

விளந்தையில் அருள்மிகு ஸ்ரீ தர்மச்ம்வர்த்தனி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் குறிப்பிடத் தகுந்தது.இக்கோவில் கர்ப்ப கிருஹத்தின் திருச்சுற்றில் வடக்குப் பக்கத்தில் அலங்கார மண்டபம் ஒன்று உள்ளது.

இந்த அலங்கார மண்டபத்தின் இடப்பக்க இரண்டாம் தூணில் விளந்தையை ஆண்ட வாண்டையார் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.அம்மண்டபத்தின் மற்றொரு பகுதியில் விளந்தை வாண்டையார் ஒருவர் மற்றும் அவரது பட்டத்தரசி சிற்பங்கள் புடைச் சிற்பங்களாகக் காட்சி தருகிறது.

ஆட்சியாளர்களான இவ்வாண்டையார்கள் மேற்குறிப்பிட்ட கோயிலின்(அகச்தீசுரர்) திருக்கோவில்,சுற்றுப் பிரகாரம், கோபுரம் ஆகிய திருப்பணிகளைச் செய்திருக்கின்றனர். இதனை உறுதி செய்யும் கல்வெட்டு கோயிலின் நுழவாயில் கோபுரத்தின் இடப்பக்கச் சுவரில் உட்புறத்தில் உள்ளது.

இக்கல்வெட்டை நடுவன் அரசு கல்வெட்டு இயல் துறை படியெடுத்து தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 6 என்னும் நூலின் 432 ஆம் எண் கல்வெட்டாக வெளியிட்டிருக்கிறது.

வன்னியகுலத்தவரான இந்த வாண்டையார்கள், அவர்களது வாரிசுகள் பற்றிய குறிப்பும் உள்ளது.

1.காத்த பெருமாள் வாண்டையார்

அவரது மகன்கள் 2.பெரியசாமி வாண்டையார், இராமசாமி வாண்டையார்

3.பெரியசாமி வாண்டையார் மகன் கிருஷ்ணப்பா வாண்டையார்

என இவர்களது குலப் பட்டியல் தொடர்ச்சியாக அண்மைக்காலம் வரை உள்ளது.

தற்போது இப்பரம்பரையில் திரு.லோகநாத வாண்டையார் அவரது குமாரர்கள் திரு.சண்முகநாத வாண்டையார், திரு கமலநாதன் வாண்டையார் போன்றோர் வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது எளிய நிலையில் வாந்து வரும் இவர்கள் வள்ளல் குணம் கொண்டவர்கள்.

விளந்தையின் உள்ள சிவன் கோயில் இப்பகுதியில் முக்கியமானது.இக்கோயிலை எழுப்பியவ்ர்கள் இவ்வன்னிய மரபினரே.இக்கோயிலுக்கு 100 ஏக்கர் நில வருவாயைக் கொடையளித்துள்ளார்கள்.

தமது நிலயில் சரிவு ஏற்பட்டு,எளிய நிலைக்கு வந்த இவர்களால் இக்கோயிலை பராமரிக்க இயலாமல் போனது.இக்கோயில் நிர்வாகத்தை தற்பொழுது வேளாள இனத்தவர்கள் பெற்றுக்கொண்டு கோயிலை நிர்வகித்து வருகிறார்கள்.

வன்னியக்குலத் தேவர்

தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

கவுண்டர், முதலியார், உடையார், நாயக்கர் என்பது போல் தேவர் என்பதும் பட்டப்பெயர் தானே தவிர சாதி பெயர் கிடையாது. பட்டப்பெயர் என்பது பல சாதி மக்களால் பயன்படுத்தப்படும். நாளடைவில் ஒரு சில இனத்தார் பெரும்பாலும் ஒரு பட்டப்பெயரினை அதிகம் பயன்படுத்துவதால், அந்த பட்டம் கொண்டவர் என்றாலே அந்த இனத்தவர் தான் என்று புரிந்து கொள்கிறார்கள். பட்டங்களுக்கும் குல பெயர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வன்னியர்களுக்கும் இந்த பட்டம் உண்டு. அவ்வாறு தேவர் பட்டம் கொண்ட வன்னியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காட்டகரம் பகுதியினை ஆட்சி செய்த வன்னியக்குலத் தேவர்கள்.

காட்டகரம் - கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வடகிழக்கில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர்.

இச் சிற்றூர் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பாளையத்தின் தலைநகரமாக விளங்கியது.இவ்வூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த தலைவர்கள் வன்னிய குலத்தினராவர்.இவர்கள் கண்டியத் தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இந்த வன்னியர்கள் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்றபோது அப்படையில் இடம்பெற்றிருந்தவர் எனக் கருதப்படுகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக இவர்களுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் ராசராசேச்சுரம் கோவிலில் மரியாதைகள் செய்யப்படுகிறது.

இம்மரபினரை இப்பகுதியில் குடியமர்த்தியவர் ராஜேந்திர சோழர் எனக் கூறுகின்றனர். இவர்களது படைச் சேவையைப் பாராட்டி ராஜேந்திர சோழர் இவர்களுக்கு இங்கு 360 காணி(475.2 ஏக்கர்) நிலக்கொடை அளித்து அதில் வரும் வருமானத்தில் அரண்மணை அமைத்துக்கொண்டு வாழுமாறு ஆணை பிறப்பித்தார்.மேலும் ராசராசேச்சுரம் கோவிலில் கார்த்திகைத் திங்கள் நடைபெறும் சோமவார வழிபாட்டில், மூன்றாம் சோமவார வழிபாட்டை இவ் வன்னிய மரபினர் நடத்திக்கொள்ள உரிமை வழங்கினார் ராஜேந்திர சோழர்.அவ்வழிபாட்டு நாளின்போது இவர்களுக்கு பட்டு பரிவட்டம் கட்டி மரியாதை செய்வார்கள்.

இப்பகுதியில் செல்வாக்கு மிக்கோராய் வாழ்ந்த இம்மரபினரே பிற்காலத்தில் இப்பகுதி பாளையக்காரர்களாக விளங்கினர்.

இம்மரபினர் இன்றும் உள்ளனர்.இம்மரபில் திரு.கண்ணுச்சாமித் தேவர் அவர்கள் பெயரனும், திரு,தங்கச்சாமித் தேவர் அவர்களின் மகனுமாகிய திரு.நடராஜத் தேவர் அவர்கள்தான் இப்போது இம்மரபு பெரியவராக உள்ளார்.

திரு.நடராஜ தேவருக்கு 1.பெரியசாமித் தேவர்2. தமிழ் செல்வன் தேவர் 3.தனராஜ தேவர் என மூன்று மகன்கள் உள்ளனர்.

இப்போதும் கங்கைகொண்ட சோழபுரத்தில் மேற்குறிப்பிட்டுள்ள வழிபாட்டு உரிமை இம்மரபு சார்ந்தவருக்கே உள்ளது.

வன்னிய குலத்தவர் என்றாலும் தமது பெயருக்குப் பின்னால் பட்டப்பெயர்களான தேவர்,பல்லவராயர் போன்றவற்றை போட்டுக்கொள்வதால் குழப்பம் ஏற்படுவது இயல்பே.